பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மனோபாவத்தை, வரலாற்றின் காலகதியை, இந்தப்புதிய அரசியல்வாதிகள் அணைபோட்டுத் தடுக்க இயலவில்லை. அளர்களது நயவஞ்சகத்தன்மை, அரசியல் அநாகரிகம், மனிதாபிமானமற்ற ஈன செய்கைக்ளினால் அடிமை உணர்வும், சிறுமைப்புத்தியும் கொண்டு இருந்த பாமரர்கள் கூட ஏற்றமிகு சிந்தனையும் எழுச்சியும் பெற்று இரும்பு அரணாக எழுந்து நின்றனர். அவர்களது தியாகம் இமய வரம்பையும் விஞ்சி நின்றது. அப்பொழுது தீயவர்களது துரோகம் அவர்களைத் தொட முடியவில்லை. அரக்கர்களது அடக்குமுறை தானே அடங்கிவிட்டது. புதிய வரலாறு படைத்தனர். அதுவரை, மன்னர்கள் மாற்றுநாட்டு மன்னரை எதிர்த்துப் போரிட்டு வந்ததுதான் வரலாறு. ஆனால் இப்பொழுது மக்கள், அன்னிய நாட்டு ஆதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடினர்.

அவர்களது போராட்டமும் தியாகமும் இன்னும் முடிவடையாத ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் ஏற்றமிகு போர்க்கொடியாக விளங்கி வருகின்றன.

"மனித சமுதாயத்தின் நலனுக்கான இந்தப்போர் இன்னும் தொடருகிறது. அதிகார ஆணவத்திற்கும் அரிய பண்புகளுக்கும் இடையில் நடைபெறும் இந்தப்போரினது குருதிபடிந்த வரலாறு வளர்ந்து கொண்டே போகிறது". ஏகாதிபத்திய வாதிகளின் விதவிதமான கொடுமைகளைத் தாங்கி வீறு கொண்டு எழுந்து வீரமரணத்தைத் தழுவிய சிவகங்கைச்சீமை செம்மல்களை நினைக்கும் நெஞ்சங்களுக்கு தங்களது காணிக்கையைச் செலுத்த கண்கள். எப்பொழுது கண்ணீரை நிறைத்து காத்துக் கொண்டிருக்கின்றன.