பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

       இரண்டாவது ஏடு

11. த்துக்குள்ளவரியும் சுவந்திரம் வகைகளையுந் தள்ளிவிச்சு நிலத்துக்குள்ள குளவெட்டுஞ் சேத்துக்காணிக்கையும்

12. குடுக்கச் சொல்லியும் கிறாமத்தில் குடியிருக்கிற அம்பலக் காரர் குடியான பேர் நிலமையாளியள் - அண்ணிக்குடி - பலபட்டடை

13. க்குடி சகலரும் வீட்டுக்குக் கட்டளை குடியொன்றுக்கு வருசத்தில் ஒரு பணமுங்குடுத்து நித்தியம் பூசையுந் திரு விளக்கும்

14. பூரீபாலினமாய் ஆள சந்திராதித்தவரை சந்திரப்பிரவேஷம் வரைக்கும் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ள மட்டும் பு

15. த்திர பவுத்திரா பாரம்பரையாய் நடப்பிச்சுக் கொள்வோ மாகவும் யிந்தப்படிக்கி பட்டயத்திலுள்ள அனைவோரும்

16. சம்மதியாக காவேரி அய்யன் சன்னதிதானத்துக்கு தர்ம சாதனப் பட்டயம் எழுதிக் குடுத்தோம் இந்த தர்மசாதன

17. ப்பட்டயத்துக்கு அணிதம் பண்ணினவன் மாதாவைக் கொன்ற தோஷத்திலும் கோவதை பிறாமனானைவதை பண்ணின

18. தோஷத்திலும் குழந்தையளை வதை பண்ணின தோஷத் திலும் போவோமாகவும் இந்தத் தர்மசாதன பட்டயம் எழுதின்ேன் னாட்டுக் கணக்கு கலியுகராயபிள்ளை

19. மகன் அய்யம்பெருமாள்பிள்ளை மணியம் சொக்குப்பிள்ளை கணக்கு வெங்கிடாசலம் மய்யன் அம்பலம் சோலைத் தேவன் காவேரித்தேவன் தண்ணாத்தேவன்

20. வேல்த்தேவன் கூளாணித்தேவன் சுந்தரத்தேவன் புள்ளிச் சித்தேவன் சுந்தரதேவன் புள்ளச்சித்தேவன் குன்னியழகன் மொந்ததேவன்

21. யிதர்க்கு அசல் நிறுபம் - அரண்மனை நிறுபம் யிந்தவேட் டிலேயிருந்து அதைப் பார்த்து எழுதிய நகல்