199
சிறுவயல் செப்பேடு (கி. பி. 1800)
1. பூர்வத்தில் சாலிவாஹன சகாப்தம் 125க்கு மேல்நிலையான
காணப்பேர் என்கிற காளையார்கோவில் ஸ்ரீ திறே தாயுகத்தில் பிரம்மதேவன்
பூசை பண்ணுகையாகவும் துவர யுகத்தில் அகஸ்தியர் பண்ணுகையாகவும் கலியுகத்
தில் பூற்வம் பார்ப்பதி தபசு செய்கையால் மடவாளாகமும் காயாத கொன்றையும்
5. சடவன்னியும் நகயுஷ்கருணீ தீர்த்தமும் சவுந்தர நாயகி யம்மனும்
பூசிக்கிற ஸ்தலத்தில் கிளக்கு மேற்கு வடக்கு தெற்க்கு திசை
நான்கும் பிறகாறத்துக்குள்ளே சாமிமேள் யெழுதிவிச்ச களங்க
ளுக்கு பேருடைய சவித்த சமாத்த நித்திய கருமானிஷ்டன பூச்சிய
பலாபலன்கொண்ட சோமாஸ்கந்தர் கிறுபையாலும் மகா செனங்கள்
10. யாபேர்களும் சுகசீவனாம்சத்துடன் வாள தர்ம நியாய ஆட்சி செய்து
வரும் புலிப்பள்ளத்தில் புலியைக் கொன்ற - சிறுவயல் ஜெமீன்தார்
வெள்ளை மருது சேர்வைக்காரர் யிந்த செப்புப்பட்டயத்தை
தன்மைத்துனரான கறுத்தையா சேர்வைக்காரர் குமார்
வீரபாண்டி சேர்வைக்காரர்க்கு வடியாரின் ஸ்ரீ காலீ
15. ஸ்வர பெருமானின் ராஜகோபுரம் கட்டும்போது சேவைக்கும்
முத்துர் அரண்மனையில் அம்மனை பிறதிஷ்டை செய்து காவல் காத்து
நெவேத்தியம் முதலான திருப்பணி செய்து காவல்காத்து
வருவதர்க்கும் மதுரை சில்லா திண்டிக்கல் வகையறா விருபாக்ஷி
பாளையப்பட்டு மகா றாச றாச ஸ்ரீ சஜபூதி ஜமீன் கம்பளத்தாற்
20. நாய்க்கன் வசம் 1800 ஆண்டு பொன்னையம்மா வெள்ளை யம்மா
பெரியதாயார் நாமாச்சியம்மாள் வேலக்கள ஆகியவற்களை
கணம் பொருந்திய கும்பெனியாற் துரை கைதி செய்து கடாக்ஷம்