பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மருது சேர்வைக்காரர் பெண்டு பிள்ளைகள்

நாட்டிற்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களது குடும்பத்தினர் அனைவருமே கும்பெனியாரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்பதுதான் வரலாறு. இதில் சிவகங்கை சேர்வைக்காரர்களது குடும்பத்தினர் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல. நல்லவேளை, இவர்களையும் கும்பெனித் தனப்தி அக்கினியூ சிறையில் அடைத்து வைக்கவில்லை. ஏனெனில், சித்திரங்குடி தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரது மனைவியையும் சகோதரியையும் இராமநாதபுரம் கோட்டைக்குள் அடைத்து வைத்து இருந்தனர். அதேபோல அபிராமம் கிராமத்தில் தூக்கில் இடப்பட்ட மீனங்குடி (முத்துக்கருப்பத் தேவரது தம்பி) கனகசபாபதித் தேவரது மனைவியையும் குழந்தைகளையும் இராமநாதபுரம் கோட்டை சிறையில் தான் வைத்து இருந்தனர்.

பெரியமருது சேர்வைக்காரருக்கு ஐந்து பெண்டுகள் இருந்தனர். இவர்கள் மூலமாகப் பிறந்த மூன்று ஆண்மக்களும் காளையார் கோவில் போருக்குப் பின்னர் பிடிக்கப்பட்டு துக்கில் இடப்பட்டு விட்டனர். ஆதலால் எஞ்சியவர்கள் அனைவ்ரும் பெண்கள்தான். ஐந்து விதவைகளும் ஆறு பெண்மக்களும் இவர்களில் சிலருக்கு மட்டும் குடும்ப பராமரிப்பிற்காக 71 சக்கரம் 6 பணம் கும்பெனியார் கி.பி 1802ல் வழங்கி உதவி செய்து வந்தனர். ஆனால் அந்தத் தொகை கி.பி. 1804ல் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை பின்னர் பதினேழு ஆண்டுகள் கழித்து பெரியமருதுவின் பெண் மக்களான தங்கம்மாள், ஆதிவீரலட்சுமி என்ற இருவர், கும்பெனியாருக்கு முறையீடு செய்து கொண்டதில் இருந்து தெரிய வருகிறது.[1] அப்பொழுது பெரியமருதுவின் குடும்பத்தில் முதல் இரண்டு மனைவிகளும். நான்கு பெண்மக்களும், இருபத்து ஐந்து பணியாட்களுடன் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வந்தது ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவர்களது அல்லலைத் தீர்ப்பதற்கு ஆதரவான உத்திரவு பிறப்பிக்கப்பட்டதாக ஆவணங்கள் எதுவும் இல்லை.

சின்னமருது சேர்வைக்காரர்களது நிலை இன்னும் மோசம். ஏனெனில் அவரது ஆண்மக்களில் துரைச்சாமியைத்தவிர எஞ்சிய


  1. Madurai District Records vol. 4669 (11.5, 1821) pp. 95-96