பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சிவகங்கை மன்னர் குடும்பம்


இவர்களது பரிதாப நிலையைப் போன்று சிவகங்கை மன்னராக இருந்த வேங்கன் பெரிய உடையாத்தேவரது குடும்ப நிலையும் இருந்தது. மன்னருக்கு நான்கு மனைவிகள். மூத்தவர் வெள்ளச்சி நாச்சியார் கி.பி. 1792ல் இறந்து போனார். காளையார் கோவில் கோட்டைப் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மன்னரையும் காளையார் கோவில் காட்டில் பரங்கிகள் பிடித்து கைது செய்து தூத்துக்குடிக்கு அனுப்பினர். பிறகு அங்கிருந்து நாடு கடத்தி பினாங் தீவிற்கு அனுப்பிவைத்தனர். அவரது மூன்று மனைவிகளும் நான்கு பெண்மக்களும் ஆதரவின்றி அல்லல் பட்டனர். வேங்கன் பெரிய உடையாத் தேவரது தம்பி மகன் (சக்கந்தி பாளையக்காரர்) கொஞ்சகாலம் வரை, இந்த ஆதரவற்ற பெண்களுக்கு பணமும் நெல்லும் கொடுத்து வந்தார். சிவகங்கை ஜமீன்தார் பகை வரும் என்ற பயத்தாலோ என்னவோ அவரது நல்ல உள்ளமும் வேறுபட்டு, அளித்து வந்த உதவியை நிறுத்தி விட்டார்.

பினாங் தீவில், அஞ்ஞாதவாசம் செய்த வேங்கன் பெரிய உடையாத்தேவர், தமக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ் தொகையில் மிச்சமான தொகையைச் சேர்த்து வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கிருந்து வருபவர் வசம் தமது குடும்பத்திற்கு அனுப்பி வந்தார். அவர் அங்கேயே இறந்துவிட்டதால் அந்த வருவாயும் கிடைப்பதற்கு இல்லை. இந்த பெண் பாலர்களான இந்தக்குடும்பம் என்ன செய்யும் இறந்த கணவருக்கு எள்ளும் தண்ணீரும் இறைக்க முடியாத வறுமைநிலை-கொடுமையிலும் கொடுமை! ஆதலால் தங்களது இறுதி முடிவை கும்பெனியாருக்கு எழுத்து மூலமாக எழுதி அனுப்பினர்.[1] ஒரு மன்னரது விதவைகளுக்கு ஏற்பட்ட வேதனைகளை நிரந்தரமாக அகற்ற அவர்கள் வேறு எந்த முடிவைத் தேர்வு செய்ய முடியும்? தீயினை வளர்த்து அதில் விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ள கும்பெனியாரது 'மேலான அனுமதி”யைக் கோரி இருந்தனர். சிவகங்கைச் சீமை மன்னரது விதவைகள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரும் பயனற்றுப்போன நிலையில் அவர்கள் மேற்கொண்ட

————————————————————————

  1. Madurai District Records vol. 4681 (30-1-1883) pp. 32-33