பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

கொடுத்து விட்டுத் திரிந்த கடைசி நபரான மயிலப்பனைப் பிடிக்கப் படாதபாடுபட்டான்.

இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள் தவிர திண்டுக்கல் சீமையிலும், மயிலப்பனை கண்டுபிடித்து கைது செய்ய ஏற்பாடுகள் செய்தான்-அக்கினியூ. கி.பி. 1802 ஜனவரி மாதம் பழனியில், தைப் பூசத் திருவிழாவிற்கு வந்த பண்டாரங்களையெல்லாம் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட செய்தியொன்றும் கும்பெனியார்களது ஆவணத்தில் உள்ளது.3 தாராபுரம் தாசில்தார் இத்தகைய சோதனையின் பொழுது. அவரது வினாக்களுக்குத்தக்க பதில் இறுக்கத் தவறிய அய்யாவையன் என்ற முருகபக்தனை சந்தேகப்பட்டு பழனி தாசில்தாரிடம் அனுப்பிவைத்தாராம் மயிலப்பனைப்பிடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு.

ஆனால் மயிலப்பனோ, கமுதி பாப்பான்குளம் வட்டங்களில் நம்பிக்கையற்ற நிலையில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பதை சிலர் கண்டு விட்டனர். மயிலப்பனைப் பிடித்துக் கொடுத்ததால் கும்பெனியார் ஓர் ஆயிரம் சக்கரம் (நாணயம்) கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அவர்களுக்குப் பேராசையை ஊட்டியது. தாங்கள் எத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுகிறோம் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. மயிலப்பனது நடமாட்டத்தை அவர்கள் கவனித்து வந்தனர். அவர், இரவு நேரங்களில் மணல்குடி மூங்கில்காட்டை ஊடுருவிச் செல்லும் நேரத்தையும் கவனித்து வந்தனர். தவசித்தேவர். (மயிலப்பனது மாமன்) பெரிய வில்லித்தேவர், அய்யாக்கண்ணு சேர்வை, அரியாபதி தேவர் இன்னும் பதினொரு இழிபிறவிகள். ஒருநாள் இரவு எட்டு மணிக்கு மேல் சித்திரங்குடியில் உள்ள தனது வீட்டுக்குள் மயிலப்பன் நுழைந்தார். தமது மருமகனுக்குப் புகலிடம் கொடுப்பது போல பாவனை செய்தான். தனது மனைவியுடன் மயிலப்பன் பேசிக்கொண்டு இருந்த பொழுது வெளியே போய் துரோகிகளுக்கு தகவல் கொடுத்து விட்டான், தவசிதேவன். ஒருவாறு நிலைமையை ஊகித்துக் கொண்ட மயிலப்பன், தனது மாமனிடம்: தன்னிடம் இருந்த இருநூறு சக்கரம் பணத்தையும் அணிமணிகளைக் கொடுத்துத் தப்பிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தத் துரோகி - தனது மருமகனை (மயிலப்பன் சேர்வைக்காரர்) ஆயிரம் சக்கரம்பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக்-


3 Madurai District Records vol. 1221 (10-1-1802) p. 71.