பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

கொடுத்தான்.[1] அவனும், அவனைச் சார்ந்த பதினான்கு கழிசடைகளும் மயிலப்பனை பாய்ந்து பிடித்து பிணைந்து சிக்கல் அமில்தாரிடம் ஒப்படைத்தனர். அன்று இரவு முழுவதும் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு [2]காலையில் இராமநாதபுரம் பேஷ்காரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

கும்பெனியாரது கொடிய எதிரி, கர்னல் அக்கினியூக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மறவர் சீமையின் மாவீரன் மயிலப்பன் அவரது முந்தைய பணியிடமான இராமநாதபுரம் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் பாளையங் கோட்டை ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார். கலைக்டர் லூவிங்க்டன் அவர் மீது நீதி விசாரணை நாடகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டான். அதற்காகக் கும்பெனித் தலைமை நடுவர் குழு ஒன்றை நியமித்தது. குதிரைப்படையின் இரண்டாவது அணி தளபதி மேஜர் பர்ரோஸ் குழுத் தலைவர். மூன்றாவது அணியின் தளபதி லெப்டினென்ட் நோவல்ஸ், முதலாவது காலாட்படை அணியின் தளபதி கேப்டன் ஒஹா டிராட்டரும், குழு உறுப்பினர்கள். [3]மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது கலெக்டர் லூவிங்க்டனது அவா ஆகும்.[4]அதற்காக மறவர் சீமையின் பல பகுதிகளிலிருந்தும் பாமர மக்களை அச்சுறுத்தி, மயிலப்பன் சேர்வைக்காரருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு செய்தான். இதோ அந்தக் கோழைகளின் பட்டியல்.[5]

1. ஆறாயிரம் பிள்ளை - அபிராமம் (கும்பெனியாரது ஊழியன்)
2. ஆர்த்த தேவர் - கமுதி
3. கஸ்துாரி செட்டி - கமுதி (சிறுவியாபாரி)
4. சுப்பன் செட்டி - கமுதி-(கும்பெனியாரது கச்சேரியில் வடிராப் பணி

  1. Madurai District Records vol. 1178 - (27-3-1802) pp. 204-205
  2. Military Consultations vol. 299 – (29-6-1802) - p. 4465
  3. Madurai District Records vol. 1139 - (14–4–1802)
  4. Ibid vol. 1140 - (7-6-1802) pp. 20-22
  5. Military Consultations vol. 299 - (29-6-1802) – pp. 4425, 80