பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210


5. குமாரசாமி - கொடுமலூர்
6. குமாரவேலு - மனலூர்
7. முத்தையா பிள்ளை - முதுகுளத்துார் (கும்பெனியாரது ஊழியர் - அம்பலகாரர்)
8. பெரிய மீரான் - மேலப்பெருங்கரை
9. மரக்காணன் - முதுகுளத்தூர் (அம்பலகாரர்)
10. வெங்கடாசலக் கோன் - அபிராமம் (அம்பலகாரர்)
11. குமரன் - முதுகுளத்துர் (அம்பலகாரர்)
12. உடையார் - சித்திரங்குடி (சேர்வைக்காரர்) (மயிலப்பனது மைத்துனர்)
13. பழனியப்ப பிள்ளை - சித்திரங்குடி (மணியக்காரர்)
14. ரெங்கசாமி நாயக்கர் - பேரையூர் - (விவசாயி)
15. வேலு முக்கந்தன் - முதுகுளத்துார் (விவசாயி)
16. முத்துச்சாமி - கிடாரத்திருக்கை
17. கறுப்பநாதன் - கடலாடி
18. முத்து இருளாண்டி - கடலாடி (அம்பலக்காரர்)
19. கன்னையன் -


இவர்கள் அனைவரும் கிளிப்பிள்ளைகளைப் போல மயிலப்பன் சேர்வைக்காரர், அவர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்ததையும், கும்பெனியாரது கிட்டங்கிகளில் உள்ள தானியத்தை கொள்ளை கொண்டதையும் சாட்சியம் சொன்னார்கள். ஆனால் கலெக்டர் லூசிங்டனும் மேஜர் ஷெப்பர்டும் இந்தச் சாட்சியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், கி. பி. 1799 ஏப்ரலிலும் கி.பி. 1801 பிப்ரவரியிலும் மயிலப்பன் சேர்வைக்காரர் முதுகுளத்துர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களில் கும்பெனியாரது கச்சேரிகளைத் தாக்கியது, அவர்களது வீரர்களைக் காயப்படுத்தி ஆயு தங்களைப் பறித்துச் சென்றது. கும்பெனி நிர்வாகத்துக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினர்.[1] இந்தக் குற்றச்சாட்டுகளை மறுதலித்த மயிலப்பன்


  1. Madurai District Records vol. 1140 (7-6-1802)pp. 20-22 Military Consultations vol, 299 (14-6-1802) pp. 4425-26