பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருச்சி, மதுரை, திருநெல்வேலிச் சீமைகளில் இருந்த பாளையக் காரர்களை ஆயுதவலிமையால் அடக்கி, அவர்களிடமிருந்து ஆண்டுதோறும் கப்பத்தொகையைப் பெற்று வந்தார். இந்தப் பாளையக்காரர் அனைவரும் முன்னர் நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்து வந்தவர்கள்.8 அதேபோல தமிழகத்தில் தன்னரசாக இருந்த தஞ்சாவூர், இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மன்னர்களையும் வருடப் பணம் கோரி நிர்ப்பந்தித்து வந்தார் வாலாஜா முகம்மது அலி. ஆனால் மறவர்கள் அவரது கோரிக்கையை நிறைவு செய்யவில்லை. அதுவரை, அவர்கள் யாருக்காவது கப்பம் செலுத்தி பழக்கப்பட்டு இருந்தால் தானே! என்றாலும் நவாப் வாலாஜா முகம்மது அலியிடம், நேச உறவுடன் நடந்து வந்தனர். நவாப்பும் அன்றைய குழப்பமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மறவர்களை மிகுதியாக நெருக்கி கப்பம் கோரவில்லை. திருநெல்வேலி பாளையக்காரர்களது சிறு அணியொன்று நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர் தலைமையில் நவாப்பின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்ட பொழுதும. நவாப்பின் மதுரை ஆளுநரான கம்மந்தான்கான் சாகிபு நவாப்பின் நடவடிக்கைகளினால் வேறுபட்டு நவாப்பையும் அவரது கூட்டாளியான பரங்கிகளைப் பகைத்துப் போர் தொடுத்த பொழுதும், மறவர் சீமை மன்னர்களும் புதுக்கோட்டை தொண்டமானும் நவாப்பிற்கு உறுதுணையாக இருந்தனர். காலத்தாற் செய்த நன்றியை மறந்த நவாப் முகம்மது அலியின் கண்களில், இராமநாதபுரம் சீமையும், சிவகங்கை சீமையும் உறுத்திக் கொண்டு இருந்தன. நல்லதொரு வாய்ப்பை அவர் எதிர்பார்த்து இருந்தார் என்பது மறவர் சீமை மன்னர்களும் புரிந்து கொள்ளவில்லை.

கி.பி. 1772 மே மாத இறுதியில் மறவர்களைத் திடீரெனத் தாக்க நவாப் திட்டமிட்டார். கும்பெனியாரது ஆயுதப்படைகளைத் துணையாகக் கொண்டு அவரது மகன் உம் - தத்துல் - உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோரது கூட்டுத் தலை மையில் ராணுவ அணியொன்று திருச்சியிலிருந்தும்9 மேஜர் பான் லோர் தலைமையில் இன்னொரு அணி மதுரையிலிருந்தும்10


8 Taylor, Oriental Historical Manuscripts (1868) vol I. p. 118

9 Military Despatches to Englands vol 7(20-6-1772) p.p.80-81

10 Military Consultations vol 42-(26-6-1772) p. 534.