பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. மாவீரன் துந்தியா

துந்தியா வாக் என்பவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். மைசூர் மன்னர் திப்புசுல்தானது போர்ப்பணியில் குதிரைப் படைப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரது உள்ளத்தில் ராஜபக்தியும், தேசபக்தியும் கொழுந்துவிட்டு எரிந்தது. மைசூர் அரசுக்கு கும்பெனியார் இழைத்து வந்த கொடுமைகளால் குமுறி னார். இறுதியாக பரங்கிகள் திடீரென பூரீரங்கபட்டிணத்தை நயவஞ்சகமாகத் தாக்கி, திப்பு சுல்தானைக் கொன்றதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பூரீரங்கப்பட்டன வீழ்ச்சிக்குப் பிறகும். இழிவாக நடத்திய விதமும் துந்தியாவின் உள்ளத்தில் ஒருவிதமான பழி உணர்வை வளர்த்தது. திப்புச்சுல்தானது ஏனைய தளபதிகளுடன் துந்தியாவும் சிறிதுகாலம் போர்க்கைதியாக பரங்கிகளது பாதுகாப்பில் இருந்து வந்தார்.

ஆனால் விடுதலை பெற்றவுடன், தம்மை யொத்த நாட்டுப் பற்றுமிக்க நல்லவர்களைத் தமது அணியில் திரட்டினார். ஏற்கனவே திப்புசுல்தானது மைசூர்ப் படையணியைச் சேர்ந்த போர் வீரர்கள் பலரும் அவரது விடுதலை முன்னணியில் சேர்ந்தனர். அவர்களது ஆதரவுடன் மைசூர் அரசுக்கு சொந்தமானதும் கும்பெனிக் கைக்கூலிகளது ஆக்கிரமிப்பில் இருந்த பல போர் நிலைகளையும் கோட்டைகளையும் கைப்பற்றினார். பல இடங்களில் கும்பெனிப்படைகளுக்கும் மைசூர் விடுதலை அணிக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் இறுதி வெற்றி பரங்கிகள் பக்கம்தான் இருந்தது.[1]

இதற்கிடையில் துந்தியா மராட்டம், வயநாடு கொங்குநாடு, திண்டுக்கல் சீமை, சிவகங்கைச்சீமை - ஆகிய பகுதிகளில் உள்ள நாட்டுத்தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். கொள்ளிடத்திற்குத் தெற்கே உள்ள அனைத்துப் பாளையப்பட்டுக்களும் (புதுக்கோட்டைத் தொண்டமானும், கோபி பாளையக்காரர் நீங்கலாக) அனைவரும் துந்தியாவின் பரங்கியர் எதிர்ப்புத் திட்டத்திற்குப் பக்க பலமாக இருந்தனர்.[2] குறிப்பாக, திண்டுக்கல்


  1. Political Consultations vol. I (A) (10-6-1800) pp. 1-10.
  2. Ibid (21-9-1800.) pp. 562-63