பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


சீமையில் உள்ள விருப்பாட்சி பாளையக்காரர். மிகவும் தீவீரமாக துந்தியாவின் சார்பாகச் செயல்பட்டார். அனைத்துத் தலைவர்களும் திண்டுக்கல் கோட்டையில் ரகசியமாக கூடி கும்பெனியாரது ஆதிக்கப் பேராசையை அடியோடு களைந்து எறிவதற்காக இயக்கமொன்றை நாடு தழுவிய இயக்கமாகத் தொடரு வதற்குத் திட்டங்களைத் திட்ட துந்தியா துணைபுரிந்தார். இவர்களது முதல் தாக்குதல் 3.6.1800ல் கோயம்புத்துாரில் உள்ள கும்பெனி அணியை நாசமாக்குதல் என்பது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திப்புசுல்தானது முன்னாள் கோயம்புத்துார் பிரதி நிதியான சுப்பாராவ் என்பவர் துடிப்பாக செயல்பட்டார். பக்கத்தில் உள்ள பாளையக்காரர்களை அணுகி அவர்களது ஆதரவைப் பெற்று, அன்று இரவு கும்பெனியாரையும் அவர்களது கைக்கூலி களாக ராஜ்புத், முஸ்லிம் அணிகளைத் தகர்க்க, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் கோயம்புத்துருக்குப் பத்துக் கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் திரண்டு இருந்தனர்.[1]

மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த ஏற்பாடு முழுவதும், சில துரோகிகளால் கோயம்புத்துார் கும்பெனித் தளபதியான மெக் காளியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரைத் தாக்குவதற்கு முன்னர் கும்பெனி அணிகள் கிளர்ச்சித் தலைவர்களைத் திடீரென கைது செய்தனர்.[2] திட்டம் தகர்க்கப்பட்டது. கும்பெனித் தலைமை உத்திரவின்படி நாற்பத்து இரண்டு கிளர்ச்சிக்காரர்கள் தூக்கில் தொங்கினர். அவர்களில் இருபத்து இரண்டு பேர் (கோவையில் 6, தாராபுரம் 8 பேர், சத்திய மங்கலம் 7 பேர், உருமாத்துர்-1) துக்கிலிடப்பட்டனர்.

அடுத்து, வடநாட்டில் துந்தியாநாகைப் பின்பற்றி, விட்டால் ஹெகாடா என்பவர் பரங்கியரைத் தொலைத்து அழிப்பதற்கு ஏற்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இவரது இயற்பெயர் நரசிம்ம என்பது. இவரது இந்தப்பொது நோக்கிற்கு இவரது உறவினர்களுடன் மைசூர் மன்னர் திப்பு சுல்த்தானது மூத்த மைந்தர் புட்டா ஹைதரும் சுப்பாராவ் என்ற கன்டை பிராம்மண-


  1. Political Consultations vol. I.A. (10-6-1800)- pp. 17-20, 23
  2. Ibid vol. 2 A (21-9-1800) - pp. 560-62