பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


ரும், உற்ற துணையாக இருந்தனர்.[1] பல இடங்களில் கும்பெனியாருடன் கிளர்ச்சிக்காரர்கள் மோதினர். கலெக்டர் மன்றோவின் திட்டப்படி, கும்பெனியார் விட்டல் தலைமையிலான கிளர்ச்சிக் காரர்களை பல இடங்களில் 9-8-1800க்கும் 18-8-1800க்கும் இடைப்பட்ட பத்து நாட்களில் பல மோதல்களில் முறியடித்தனர். கிளர்ச் சித்தலைவர்கள் பிடிக்கப்பட்டு 22.8-1800ம் தேதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.[2] வீரன் விட்டலது குடும்பத்தினரை வெகு தொலைவில் உள்ள பூரீரெங்கப்பட்டணக் கோட்டையில் சிறை வைத்தனர். மீண்டும் அவர்களும் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துவிடாமல் இருப்பதற்கு கும்பெனியாரது ஆவணங்கள் விட்டலை “பயங்கரமான, அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரராக” வர்ணித்துள்ளன.[3] வயநாட்டுக் கிளர்ச்சி முடிந்தவுடன் கும்பெனியாரது அனைத்து அணிகளும் பல பகுதிகளில் இருந்து துந்தியாவை இலக்காகக் கொண்டு முடுக்கிவிடப்பட்டன.

இவை அனைத்திற்கும் கூட்டுப்பொறுப்பாக ஆர்தர் வெல்லெஸ்ஸி நியமிக்கப்பட்டான். மைசூர் இறுதிப்போரை நடத்தி திப்புசுல்தானைத் தோற்கடித்த மாவீரனாக கும்பெனியாரால் போற்றப்பட்ட அந்த தளபதிக்கு சகல உதவிகளையும் வழங்கி உதவுமாறு கும்பெனியாரது தலைமை, ஹைதராபாத் நிஜாமையும், மராட்டிய மன்னர்களையும் கேட்டுக் கொண்டது. கர்னல் பெளவேடிர், மேஜர் பிளாக்கி, மேஜர் மக்காலிஸ்டர், கேப்டன் கில்பாட்ரிக் - ஆகிய இராணுவத்தலைவர்கள், கோயம்புத்துார், மங்களுர் ஹைதராபாத், பம்பாய் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் அணிகளுடன் துந்தியாவை "மனித இனத்தின் வைரியை” (அவர்களது நோக்கில்) தாக்குவதற்குப் புறப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில், கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரா நதிக்கும் இடைப் பட்ட தோவாப் சமவெளியில் பல இடங்களில் - தம்மூல், ஹண்னுர், ஹாங்கல், லீமாவில் கிர்ஹட்டி, அங்கோரே, இமலாபாத் ஆகிய ஊர்களில் துந்தியாவின் கிளர்ச்சிக்காரர்கள் படைகளுக்கும் கும்பெனியாரது அணிகளுக்கும் இடையில் பல போர்கள் நிகழ்ந்தன. ஆனால் அப்பல்பரி என்ற ஊருக்கு அருகில்


  1. Ibid vol. I.B. - (18-7-1800) - pp. 388-89
  2. Ibid (25-8-1800) - pp. 487-88
  3. Political Consultations vol. I (B) (2-8-1800) pp. 38