பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215

215

நடைபெற்ற உக்கிரமான போரில், துந்தியாவின் படைகளை கும்பெனியாரது பீரங்கிகள் துவம்சம் செய்தன. மாவீரன் துந்தியாவும் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார்.[1] விடுதலைப் பள்ளுபாடிய வீரக்குயில் மறைந்தது. தவழ்ந்து சென்ற தென்றலில், தயங்கிச் சென்ற அந்தப்பள்ளு, என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

5 ஜமேதார் முகம்மது காலிது

அருஞ்சாதனைகளைக் செய்த அரிய வீரர்களை மட்டுமல் லாமல், ஆண்மையும் வீரமும் இல்லாத துரோகிகளையும் கூட வரலாறு நமக்கு இனங்காட்டி வந்துள்ளது. அந்த வகையில் சிவகங்கைச் சீமையின் வீரவரலாறு, துரோகி முகம்மது காலிதுவையும் நினைவூட்டுகிறது. பெரும் பொருளை அன்பளிப்பாகப் பெறு வதற்காக, பிறந்த மண்ணின் மகத்தான பாரம்பரியத்திற்கு மாசு சேர்த்த மனிதப்பதடி. இவனது சொந்த ஊர் தெரியவில்லை. ஆனால் தஞ்சை மராத்திய மன்னரது குதிரைப்படையணியில் பணியாற்றியவன் என்பது தெரியவருகிறது. கி.பி. 1782ல் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த வெள்ளைப்பரங்கிகள் மீது திடீரென மின்னல் தாக்குதல் நடத்திய பொழுது திப்புசுல்தானது இரும்புப் பிடியில் இருந்து தப்பி உயிர் பிழைக்க சென்னை ஓடினான். அங்கே சிறிது காலம் கும்பெனித் தளபதி காட்பிரே என்பவனது சேவகத்தில் அமர்ந்தான். அவனது பணியில் ஆட்குறைப்பு ஏற்பட்டு பதவி இறக்கம் ஏற்பட்ட பொழுது கி.பி. 1784ல் ஆர்க்காட்டு நவாப்பினது பணியில் சுபேதாராகச் சேர்ந்தான். சிவகங்கைச் சீமைக்கு அனுப்பப்பட்டான். கி.பி. 1791ல் கும்பெனியார் ஆர்க்காட்டு நவாப்பின் பேஷ்குஷ் தொகை வசூலுக்கு, நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டபொழுது, பணியில் மீண்டும் ஆட்குறைப்பு ஏற்பட்டதால், வேறு வழி இல்லாமல் திருப்பத்துரில் தங்கி வாழ்ந்து வந்தான்.[2] கி.பி. 1801ம் ஆண்டின் பிற் பகுதியில் மக்கள் எழுச்சி பெற்று மருதுபாண்டியரது அணியில்


  1. Ibid I B (10-9-1800) p. 500
    Ibid II (B) (26-10-1800) p. 901
  2. Revenue Sundries uol. 26 (17-10-1801) p. 753-54