பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


சேர்ந்து கும்பெனிப்படைகளுடன் மோதி வந்த பொழுது இவனும் போராளிகளுடன் சேர்ந்து அரண்மனை சிறுவயல் காட்டுப் போரில் கும்பெனியாரால் பிடிக்கப்பட்டான். தளபதி, அக்கினியூ முன்னர் நிறுத்தப்பட்டான். அக்கினியூவின் ஆசைவார்த்தைகளில் மயங்கி போராளிகள் பற்றி அவன் அறிந்து இருந்த அனைத்து விபரங்களையும் அக்கினியூவிடம் கக்கிவிட்டான். அத்துடன் காளையார் கோவில் கோட்டைக்கு அரண்மனை சிறுவயல் காட்டுவழியாக எளிதாகச் சென்று அடையக்கூடிய இரகசிய வழியையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தான். அரண்மனை சிறுவயல் காட்டில் ஒவ்வொரு அடி மண்ணிற்கும், மரணப்போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த கும்பெனியாருக்கு துரோகி முகம்மது காலித் அறிவித்த விவரங்கள். அவர்களது வெற்றி வாய்ப்பை விரைவு படுத்தும் அற்புத மருந்தாக இருந்தது. தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் துரோகிக்கு பொன்னும் பொருளும் வழங்கு அக்கினியூ பாராட்டினான்.[1]

காளையார் கோவில் போர் முடிந்தவுடனேயே, அக்கினியூ கும்பெனியாருக்கு எழுதி துரோகி காலிதுக்கு தகுந்த சன்மானம் வழங்க கும்பெனித்தலைமைக்குப் பரிந்துரை அனுப்பினான். கும் பெனியாரும் அவனுக்கு மாத ஓய்வு ஊதியமாக இருபது ஸ்டார் பக்கோடா வழங்கி உதவினர்.[2] அவன் திருச்சிராப்பள்ளி சென்று எஞ்சிய வாழ்க்கையை அங்கேயே கழித்தான்.

6. சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும்

மதுரைத் தமிழ்ச்சங்க சுவடித் தொகுப்புக்களில் இருந்து பெறப்பட்ட இந்த இரண்டு சிற்றிலக்கியங்களையும் சென்னை அரசின் கீழைச் சுவடி காப்பகத்தினர் 1952 ல் அச்சேற்றி வெளியிட்டனர். இது வரை, தமிழில் வரையப்பட்டுள்ள வரலாறு சம்பந்தப்பட்ட நாடோடி இலக்கியங்களான “இராமப்பையன் அம்மானை” “ராஜா தேசிங்கு”கான்சாகிபு” ஆகியவை போன்று


  1. Revenue Sundries vol. 26 (21-10-1801) p. 465
  2. Revenue Sundries vol 26 (1-12-1802) p. 1011