பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


அல்லாமல், இந்த இலக்கியங்களின் அமைப்பு மிகுந்த வேறுபாடுகளுடன் விளங்குகின்றன. நாடோடி இலக்கியங்களுக்காக உத்திகள், சந்தங்கள் இல்லாமல், செய்திகளைத் தெரிவிப்ப தற்காக மட்டுமே இவை புனையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. செய்திகளும் காலம், களம் ஆகியவைகளைக் கடந்து வரலாற்றுக்கு முரணாகக் காணப்படுகின்றன.

ஆர்க்காட்டு நவாப் இராமநாதபுரம் மீது படை எடுத்து வருகிறார். முத்து இருளப்ப பிள்ளையினால் இந்தப் படையெடுப்பை வெல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டவுடன், அரசியார் “முத்திரை மோதிரத்தை சாத்தி”, முத்து இருளப்பப் பிள்ளையைப் பிரதானியாக்குகிறார். இராமநாதபுரம் அரசியாரும் நவாப்பிற்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முனைகிறார். (சிவகங்கை கும்மி. பக்கம் 15) இந்தப் படையெடுப்பு நிகழ்ந்தது கி. பி. 1772 மே மாத இறுதி. அப்பொழுது பிரதானியாக இருந்தவர் பிச்சை பிள்ளை என்பவர் முத்துஇருளப்ப பிள்ளை பிரதானியாகப் பணியாற்றுவது விஜயரகுநாத முத்து இராமலிங்க துேச பதியின் ஆட்சியில் (கி. பி. 1784-91 ல்)

பிரதானி முத்து இருளப்ப பிள்ளை, ஆறுமுகம் கோட்டையைத் தாக்க முனைந்த பொழுது நவாப் பயந்து, இராமநாதபுரம் படையெடுப்பை நிறுத்தி சிவகங்கைச் சீமை மீது பாய்ந்தார் (சிவகங்கை கும்மி பக்கம் 17 சிவ. அம்மானை பக். 115) ஆனால் ஆர்க்காட்டு நவாப்பின் மைந்தன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித்தளபதி, ஜோசப் சுமித் ஆகியோரது கூட்டுத் தலைமையிலான படைகள் மூன்று நாட்களாக இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கி 2-6-1772 ல் கோட்டையைக் கைப்பற்றியதுடன் அரசியாரையும் இளவரசரையும் கைது செய்து திருச்சி சிறையில் இட்டனர் என்பது வரலாறு.

23.6.1772 அன்று காளையார் கோவில் கோட்டைப் போரில், சிவகங்கை மன்னர் வீரமரணம் அடைந்ததும், பிரதானி தாண்டவராய பிள்ளை, அரசி வேலு நாச்சியாரையும் அவரது பெண் குழந்தையையும் பத்திரமாக சிவகங்கைக்கு வடக்கே உள்ள மைசூர் அாசுக்குச் சொந்தமான விருபாட்சிக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் பெற்றார் என்பது வரலாறு. ஆனால் கொல்லங்குடியில் இருந்த வேலு நாச்சியாரைச் சிவிகையில் ஏற்றி, மருது சகோதரர்களே மேலுர் வரை சுமந்து சென்றதாகவும் பின்னர்