பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218


திண்டுக்கல் சென்று திப்புச்சுல்தானைச் சந்தித்து ஆதரவு பெற்றனர் என்பது சிவகங்கை கும்மி செய்தி (பக்கம் 21. 23). திப்பு சுல்தானது உதவி பெற்று சிவகங்கைச் சீமையை மருதிருவர் மீட்டனர். (சிவகங்கை சீமை கும்மி, பக்கம் 115). காளையார் கோவில் கோட்டைப் போர் முடிவுற்ற பொழுது மைசூர் மன்னராக இருந்தவர் ஐதர் அலி, பகதூர். திண்டுக்கல் கோட்டையில் இருந்து மருது சகோதரர்களுக்கு ஆயுத உதவி வழங்கி, சிவகங் கையை கி. பி. 1781 ல் மீட்க உதவியவரும் அவரே. மேலும் திப்பு சுல்தான் மைசூர் மன்னராக கி. பி. 1782 இறுதியில் தான் முடி சூடிக் கொண்டார். இவ்விதம் செய்திகள் வரலாற்றுடன் இணைந்ததாக இல்லை.(இன்னும் ஒரு வேடிக்கை! மருது சகோதரர்கள் முக்குளத்தில் மொக்கைப் பழனி சேர்வைக்காரர் என்பவருக்கு மக்களாகப் பிறந்தவர்கள். ஆனால் இவர்கள் சிவகங்கைப் பிரதானி தாண்டவராய பிள்ளையின் மக்கள் என்றும் பிரதானிக்கு வயது அதிகமாகிவிட்டதால் அவரது மக்களான மருது சகோதரர் அடைப்பம் பணியை ஏற்றனர் என்ற செய்தியை சிவகங்கை கும்மி (பக்கம் 10-11) சொல்கிறது.

மேலும், ஆர்க்காட்டு நவாப், கும்பெனியாருக்கு தமிழகத்தைத் தொன்னூற்று ஆறு ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதால், மருது சகோதரர்கள், சென்னை சென்று கும் பெனி கவர்னரைச் சந்தித்து “அவரது ஆதரவு பெற்ற கும்பெனி யாரது பிள்ளைகளாக” கப்பம் ஏதும் இல்லாமல் சிவகங்கையை ஆளும் உரிமை பெற்றுத் திரும்பினார்கள். (சிவ, கும்மி பக்கம் 34) ஆனால் வரலாறு அப்படி அல்ல. சிவகங்கைச் சீமையை கி.பி. 1781ல் மீட்ட மருது சகோதரர்கள் ராணி வேலு நாச்சியாரது பிரதானிகளாக தன்னாட்சி செலுத்தி வந்தனர். என்றாலும் கி.பி. 1784ல் ஆர்க்காட்டு நவாப், கும்பெனித்தளபதி புல்லர்ட்டனை சிவகங்கைக்கு அனுப்பி கப்பத்தொகையை வசூலித்தார். கும் பெனியாருக்கு எதிரான போர்க்கொடி தூக்கிய காலம் வரை (கி.பி. 1800) முன்னர் நவாப்பிற்கும், பின்னர் அவரது குத்தகைதாரரான கும்பெனியாருக்கும் சிவகங்கை பிரதானிகள் கப்பம் செலுத்தி வந்தனர். மற்றும் மதகுப்பட்டி காட்டில் அலைந்து கொண்டிருந்த சின்ன மருது, கும்பெனித் தளபதி அக்கினியூவைக் கண்டவுடன் தமது வளரித்தடியை வீச கையை ஓங்கியதாகவும், அப்பொழுது பச்சை வாதநோய் சின்னமருதுவைத் தாக்கியதால் போரிட முடியாமல் கும்பெனியார்களால் பீடிக்கப்பட்டார் என்பது