பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

மறவர் சீமைக்குள் புகுந்தன. தங்களது தன்னரசு உரிமையை நிலைநாட்டப் போராடிய மறவர் சீமை அரசுகள் ஆயிரக்கணக்கான மறவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றன. பதினோரு வயதான இராமநாதபுரம் இளவரசர் முத்துஇராமலிங்க சேதுபதி, அவரது தாயார், தமக்கையருடன் திருச்சிக்கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக சிறை வைக்கப்பட்டனர்.11காளையார்கோவில் போரில் நவாப்பின் அணியைப் பொருதிய சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத பெரிய உடையாத்தேவர். பரங்கியரின் குண்டினால் உயிர் இழந்தார்.12 அவரது விதவை ராணி வேலு நாச்சியார் தமது ஒரே பெண் குழந்தையுடன் பிரதானி தாண்டவராய பிள்ளையுடனும் மைசூர் மன்னர் ஐதர் அலியின் பகுதியான விருபாட்சியில் (திண்டுக்கல் நகரிலிருந்து வடமேற்கே இருபது கல் தொலைவில் அன்றைய மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது) தஞ்சம் புகுந்தார்.13

மன்னர் இல்லாத இரண்டு சீமை மக்களும் ஆற்காட்டு நவாப்பின் ஆட்சியைப் புறக்கணித்து ஆங்காங்கு கிளர்ந்து எழுந்தனர். கைகலப்புகளும் மோதல்களும் தொடர்ந்தன. நவாப்பின் நிர்வாகம் நிலை குலைந்தது. மிகவும் பாதுகாப்பான கோட்டைகளுக்குள் மட்டும் இருந்து கொண்டு நவாப்பின் பணி யாளர்கள் செயல்பட்டனர்.14 ஆற்காட்டு நவாப்பிற்கும் வெள்யர்களுக்கும் எதிராக, ஐதர்அலி கி.பி. 1780ல் கர்நாடகப் போரைத் துவக்கிய பொழுது, திண்டுக்கல் கோட்டையில் இருந்த படைப்பிரிவு ஒன்றை மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை சீமைக்குள் செல்லுமாறு பணித்தார். அவர்களும் மக்களது ஆதரவுடன் நவாப்பின் கூலிப்படைகளை சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டி அடித்தனர்.15 எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சிவகங்கை மீண்டும் தன்னாசாக இயங்-


11 Maj Vibart H. Military History of Madras Engineers and Pioneers (1881), p. 120,

12 Military Consultations, vol 42 (1-6-1772), p. 442.

13 Dr. K. Rajayyan-History of Madurai (1974) p. 261.

14 Military Country Correspondence vol 21 (1772), p. 236.

15 Correspondence on the Permanent Settlement of Southern Pollams, Ramnad and Sivaganga Zamindar's p. 28.