பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223

போராடி, உயிர்துறந்த உத்தமர்களது வழியினர் அனைவரும் “உதிரப்பட்டி”க்கு அருகதை உள்ளவர்கள் என்பதை இந்திய அரசு இதுவரை உணரவில்லை.

அந்த நிலை, இன்னும் ஏற்படாத காரணத்தினால் தமிழ் நாடு அரசு தமிழ் மாநிலத்தில் வரலாறு படைத்த விடுதலை வீரர்கள், அவர்தம் வழியினரைச் சிறப்பிக்கும் வகையில் 1974ல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு நாயக்கரது (கி. பி. 1792-99) வழியினருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சிவகங்கைச்சீமை விடுதலைப்போரைத் தொடங்கி கி. பி. 1801ல் மடிந்த வீர மருதுபாண்டியரது வழியினருக்கும் உதவும் வகையில் 1982ல் உதவித் தொகை வழங்கும் உத்திரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி சிவகங்கை, திருப்பத்தூர், இளையான்குடி, பரமக்குடி, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை, மேலுரர். ஆகிய வட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மருதுபாண்டியர் வழியினர் இருநூற்று இரண்டு பேர்கள் திங்கள் தோறும் தமிழ்நாடு அரசினரிடமிருந்து ஒவ்வொருவரும் ரூபாய் நூற்று ஐம்பது மட்டும் பெற்று வருகின்றனர்.

அரசு ஆணை எண் 1143 பொது (அரசியல்) துறை. 19-7-1982 யின் கீழ் உதவித் தொகை பெறும் மருதுபாண்டியர் வழியினர் பட்டியல், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

மருது பாண்டியர் வழித்தோன்றல் பட்டியல்

பெரிய மருது கிளையினர்

1. திரு. வி. பூமிநாதன், சூடியூர் (பரமக்குடி வட்டம்)
2. ” கே. மீனாட்சிசுந்தரம், பாலரங்காபுரம், மதுரை-9
3. ” கே. பாலு, வடக்கு வெளிவீதி, மதுரை-1
4. ” கே. தங்கவேல் சேர்வை, வடக்குவெளிவீதி, மதுரை-1
5. ” எஸ். செல்லச்சாமி என்ற பிச்சை, கீழமாசிவீதி, மதுரை