பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

காளையார் கோட்டைப் போரில் ஆர்க்காட்டு
நவாப்பின் படையுடன் சண்டையிட்டு
சிவகங்கை மன்னர் முத்துவடுகனாதர் வீரமரணம் —– 23-6-1772

சிவகங்கைச் சீமையில் இருந்து ஆர்க்காட்டு
நவாப் படைகளையும் கும்பெனியாரது
கூலிப்படைகளையும் விரட்டியடித்து
ராணி வேலுநாச்சியார் அரசியாகவும்
மருது சகோதரர்கள் பிரதானிகளாகவும் பதவி ஏற்றது —– 1780

இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க
சேதுபதியை கும்பெனியார் பதவி நீக்கம்
செய்து திருச்சி கோட்டையில் சிறை வைத்தது —– 8-2-1795

சிவகிரி பிரதானி சங்கரலிங்கம் பிள்ளையை
திரிகோணமலைக்கு கும்பெனியார் நாடு
கடத்தியது —– 20.9-1797

முதுகுளத்தூர், அபிராமம், கமுதியில் உள்ள
கும்பெனியார் கச்சேரிகளைத் தாக்கி, மக்கள்
கிளர்ச்சியை தளபதி மயிலப்பன் சேர்வைக்
காரர் துவக்கியது —– 24-5-1799

கட்டபொம்மன் சின்னமருது சேர்வைக்காரரை
பழமானேரியில் சந்தித்தது —– 10-6-1799

ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில்
இருந்து தப்பியது —– 2-2-1801

பாஞ்சாலங்குறிச்சிப் போரில்
கும்பெனிப் படைகள் தோற்று ஓடியது. —– 10–2–1801

பாஞ்சாலங்குறிச்சிப்போரில் கும்பெனி
யாரிடம் ஊமைத்துரை தோல்வி, —– 24-5-1801

ஊமைத்துரைக்கு அரண்மனை சிறுவயலில்
சின்னமருது சேர்வைக்காரர் வரவேற்பு —– 29–5-1801.