பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமியை மேலூர் அருகே பிடித்து காவலில் வைத்தது27-10-1801
மீனங்குடி முத்துக் கறுப்பத் தேவரை குத்தகை நாட்டில் பிடித்து காவலில் வைத்தது27-10-1801
வாராப்பூர் பாளையக்காரர் பொம்மை நாயக்கரைப் பிடித்து காவலில் வைத்தது27-10-1801
சேடபட்டி அம்பலகாரரையும் அவர் மகனையும் பிடித்து தூக்கிலிட்டது1-11-1801
ராஜசிங்கமங்கலம் ஜகந்நாத ஐயனை நாடு கடத்தி கடலுக்கு அப்பால் அனுப்பியது1-11-1801
கோபால மணியக்காரரையும் வெங்கடாசலத்தையும் நத்தத்தில் தூக்கிலிட்டது2-11-1801
கள்ளர்மக்கள் தலைவர் சேதுபதியை சும்மணப்பட்டியில் தூக்கிலிட்டது6-11-1801
அபிராமத்தில் கனக சபாபதித் தேவரை தூக்கில் இடப்பட்டது.16-11-1801
சிவத்தையா, ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெளியில் சிரச்சேதம் செய்தது16-11-1801
சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமி சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர்; சடைமாயன் உள்ளிட்ட எழுபத்து இரண்டு பேர்களை நாடு கடத்தி பினாங் தீவிற்கு அனுப்பியது11-2-1802
சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் காவலில் வைக்கப்பட்டதும்26-3-1802