பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

அவரது எடுபிடிகளான கும்பெனியாரது எதேச்சாதிகாரத்தையும் எடுத்து எறிவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார். பாண்டிச்சேரியைத் தலைமை இடமாக கொண்டிருந்த பிரஞ்சுக்காரர்களுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு ஆயுத உதவி பெறுவதற்குப் பாடுபட்டார்.19 மேலும் இலங்கையில் உள்ள டச்சுக்காரர்களது உதவியுடன் இராமநாதபுரம் சீமையில் ஆயுதசாலைகள் அமைத்து வந்தார்20. எல்லாம் ரகசியமாக நடைபெற்று வந்தன. ஆனால் கி பி. 1792ல் திடீரென கும்பெனியார் நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமாக, மறவர் சீமையின் வருடப்பணத்தை (நவாப்பிற்குப் பதிலாக அவர்களே) வசூலித்துப் பெற்றுக் கொள்ளும் உரிமையை மூன்று ஆண்டுகளுக்குப் பெற்றனர்.21 இதனால் மறவர் சீமை கும்பெனியாரது நேரடியான தலையீட்டிற்கு இலக்காகியது.

கும்பெனியார், தங்களுக்குரிய வருடப்பண வசூலுடன் அமையாமல், மறவர் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித்துணிகளின் ஏற்றுமதியில் ஏகபோக கொள்ளைக்கு முயன்றனர். இந்த முயற்சிக்கு சேதுபதி மன்னர் இணங்காததுடன், அதனை வன்மையாக எதிர்த்தார். மேலும், கும்பெனியாரது மேலிடமும், கும்பெனியாரின் குட்டி தேவதையான கலைக்டரும் பிறப்பிக்கும் கட்டளைகளுக்கு பணிய அடியோடு மறுத்தார்.22அதனால், கும்பெனியாரின் சீற்றத்தை நேரடியாக அரசியல் நிலையில் சமாளிப்பதற்கும் தயாராகி வந்தார். ஆனால், கும்பெனியார் அவர்களது திட்டத்தை நிறைவேற்றுவதில் முந்திக் கொண்டனர். சேதுபதி மன்னர் எதிர்பாராத நிலையில் 8-2-1795ம் தேதி அதிகாலையில் திடீரென இராமநாதபுரம் கோட்டையை அவர்கள் தாக்கிப்பிடித்தனர். இராமநாதபுரம் மன்னரைக் கைது செய்து மீண்டும் திருச்சிக் கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக அடைத்தனர்.23 குற்றச்சாட்டு, நீதி விசாரணை, தீர்ப்புரை - எதுவுமே இல்லை. உலகத்தின் மிகப் பழமையான ஜனநாயக அரசியலைப் பெற்று இருந்த வெள்ளைப் பரங்கிகளின் அரசியல் விவேகத்திற்கு இந்த


19 Kali, volu, Dr. History of Marawa (1975) pp 512-19.

20 Military Consultations, vol 190 (25-2-1795) pp 512-19

21 Aitchinon - Collecction of Treaties. vol. 5

22 Militury Country Correspondence vo1. 45, (26-6-1794) p. 327.

23 Political 1)"Patches to England vol" 2, pp 338-40.