பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம். தன்னுரிமை காக்கப் புறப்பட்ட தன் மானச் செம்மல், சேதுபதி மன்னர் பதினான்கு ஆண்டு செல்லரித்துப்போன சிறைவாழ்க்கையினால் 24-2-1809ல் சென்னையில் மறைந்தார்.24

ஆனால், மன்னர் இல்லாது மனங்குமுறிய மறக்குடி மக்களது ஆவேசம் இரண்டு கிளர்ச்சிகளாக உருப்பெற்றன. முதலில் கி. பி. 1797ல், இராமநாதபுரம் சீமையின் தென்பகுதியில் கும்பெனியாருக்கு வரி செலுத்த மறுக்கும் குடிமக்கள் கிளர்ச்சியொன்று எழுந்து பரவியது. அப்பொழுது கும்பெனிக் கலெக்டராக இருந்த கலெக்டர் காலின்ஸ் ஜாக்ஸன் விரைவான நடவடிக்கை எடுத்து அதனை அடக்கி ஒடுக்கினார்.25 ஆனால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அதே முதுகுளத்துார் பகுதியில் மக்கள் கிளர்ச்சி எழுந்தது. ஆயுதப்புரட்சியாக இராமநாதபுரம் மன்னரது சேவையில் இருந்த மயிலப்பன் என்ற குடிமகன் இந்தக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.26கும்பெனியாரிடம் குரோதமும் வெறுப்பும் கொண்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி, குளத்துார் காடல்குடி, சாத்துர் போன்ற பாளையக்காரர்களும் இந்தக் கிளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். கிளர்ச்சி சூறாவளி போலப் பாவியது. நாற்பத்து ஒரு நாட்கள் தொடர்ந்து பரவிய இந்தக் ,கிளர்ச்சியும். பாளையங்கோட்டை, மதுரைப் பாசறைகளில் இருந்து வந்த கம்பெனிப் படைகளின் கொடூரமான தாக்குதலால் அடக்கி நசுக்கபட்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, இராமநாதபுரம் மன்னர் மீது கொண்டிருந்த முன் விரோதம் காரனமாக சிவகங்கை சேர்வைக்காரர்களது மறவர் படையும், கிளர்ச்சியின் கொடுமுடியாக விளங்கிய கமுதிக் கோட்டைப் பகுதியில் கிளர்ச்சிக்காரர்கள் பலர், வீரமரணம் அடைந்து தியாகிகள் ஆவதற்கும் உதவின.27 இங்ஙனம் நூற்றுக்கணக்கான வீரர்களது தியாகத்தினால் வளர்ந்த இந்த அந்நிய எதிர்ப்பு இயக்கம், துரோகிகளால் தளர்ந்தது. முதுகுளத்துார் அமில்தார். ஆப்பனூர்


24 Madurai District Records vos 1197, (1-2-1899) pp.135-36.

25 Pate. Tirunelveli Gazetter (1917), p. 79,

26 Madurai District Records, vol 1157 (27-4-1799), pp 75-78.

27 Military Country Correspondence vol. 253-4 (1799) pp3031-46