பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

மறவர்கள், சித்திரங்குடி நாட்டார்கள்; அபிராமம் வீசுகொண்டத் தேவன். போன்ற சொந்தமண்ணின் மீது முற்றும் பற்று இல்லாத முண்டங்களால், கும்பெனியாரது ஒடுங்கி நடுங்கிய கைகள் ஓங்கி, உயர்ந்து, உறுதி பெற்றன.

சிவகங்கைச்சீமை : சிவகங்கைச் சீமையை நவாப்பிடமிருந்தும் கும்பெனிப் படையினிடமிருந்தும் விடுவித்த மருது சேர்வைக்காார்கள் ராணிவேலு நாச்சியாரை சிவகங்கைச் சீமையின் அரசியல் தலைவியாக அமரச்செய்து, அவர்களே பிரதானிகளாக இருந்து நிர்வாகத்தை இயக்கி வந்தனர்.28 ராணியிடம் பெரிய மருதுவிற்குள்ள அந்தரங்க தொடர்பு காரணமாக அவரது சகோதரரான சின்ன மருதுவின் நடவடிக்கைகளில் சுயேச்சையான சிந்தனையும் இயல்பான முரட்டுத்தன்மையும் பிரதிபலித்தன. என்றாலும், அவரது கட்டளைகளுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு எழவில்லை. அவர் எதைச் செய்தாலும் அவரை ஆதரிப்பதற்கு மக்கள் தயாராக இருந்தனர். காரணம் சின்ன மருதுவிற்கும் பொதுமக்களுக்கும் நெருங்கிய இணைப்பும் உறவும் இருந்தது. எந்த நேரத்திலும் குடிமக்கள் அவரைச் சந்தித்துக் குறைபாடுகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு ஏற்றவாறு அவர் பாதுகாப்பற்ற மாளிகை யொன்றில் குடியிருந்து வந்தார்.29 குறுகிய காலத்தில் இந்தப் பிரதானிகள் மக்களது முழுமையான செல்வாக்கைப் பெற்றனர். சிவகங்கைச் சீமையின் உண்மையான ஆட்சியாளராக அவர்கள் விளங்கினர்.

கி.பி. 1783 ஜூலைமாத இறுதி, ஆற்காட்டு நவாப் கும்பெனிப் படையை மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி அவருக்குச் சேரவேண்டிய கப்பத்தொகையை வசூலித்து வருமாறு உத்தரவிட்டார். அந்த அணிக்கு தளபதி புல்லர்டன் தலைமை தாங்கிச் சென்றான் 30இதனை அறிந்த பிரதானிகள், அந்தப் பரங்கிப் படையை காளையார்கோவிலில் எதிர்த்துப் பொருதுவது என முடிவு செய்தனர். ஆனால், அப்பொழுது கள்ளர் நாட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததாலும் அங்கும் பரங்கிகளது


28 Kathirvelan, Dr. S. History of Marawa (1977), p. 166.


29 Cal.. Welsh - Military Remini Secnces (1890) vol, 1, p. 1 wl)

30 Rajayyan, K. Dr. History of Madura (1974), p. 290.