பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அடக்குமுறையும் பேயாட்டமும் தொடர்ந்ததாலும் மருதுசேர்வைக்காரர். அப்பொழுது கும்பெனியாருடன் இணக்கமாக நடந்து கொள்ள முடிவு செய்து, நவாப் நிர்ணயித்த ஒருலட்சம் ரூபாயினை வருடப்பணமாகச் செலுத்துவதற்கும் இணங்கினர். தவணைப் பணத்தில் ஒரு பகுதியாக ரூபாய் நாற்பதாயிரத்தை தளபதி புல்லர்ட்டனிடம் கையளித்தனர்.31

நாளடைவில் பிரதானிகளுக்கும் ராணி வேலு நாச்சியாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. மருது சேர்வைக் காரர்களை ஆதரிப்பவர்களும் ராணியை பின்பற்றுபவர்களுமான அரசு ஊழியர்களும் குடிமக்களும் என இரு அணிகளாகப் பிரிந்தனர். இந்த நிலையில் தமது சீமையில் உள்ள குழப்பவாதிகளை அடக்கி நாட்டில் அமைதியை நிலவச்செய்யுமாறு நவாப்பை வேலு நாச்சியார் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே தமக்கு வருடப் பணத்தை சரியாக அனுப்பி வைக்கவில்லையென்று காரணத்தினாலும், இராமநாதபுரம் சீமையில் புகுந்து அட்டுழியம் செய்ததாக வரப்பெற்றுள்ள புகார்களின் ஆதாரத்தைக் கொண்டும் சிவகங்கை பிரதானிகள் மீது பாய்வதற்கு நவாப் துடிதுடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கும்பெனியார் அப்பொழுது நவாப்பிற்கு தவத் தயங்கி வந்தனர். 32அப்பொழுது, ராணி வேலு நாச்சியார் ஆர்காடு நவாப்பிற்கு அனுப்பிய கடிதத்தில்" ... ... ... முன்பு நீங்களும் நவாப் முத்தபார்கானும் என்னைச் சந்தித்த பொழுது எனது எதிரிகளை துரத்தியடிக்கப் போவதாக தெரிவித்தீர்கள். இாண்டாவது நாள் இங்கிருந்து சென்று, கொல்லங் குடியைக் கைப்பற்றிய பிறகு மருதுவைச்சேர்ந்த இருபது ஊர் நாட்டுத் தலைவர்கள் என்னிடம் வந்து விசுவாசம் தெரிவித்தனர். மருது சேர்வைக்காரர்களைப் பிடித்து வருமாறும், அவரது ஆட்களை ஒழித்து விடுமாறும் கூறி அனுப்பி வைத்தேன். பின்னர் கொஞ்ச காலத்திற்கு முன்னர் வரை, மருது சேர்வைக்காரர்கள் எனக்கும், எனது அரசாங்கத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வந்ததை நவாப்பிற்குத் தெரிவித்தேன். அவரும் என்னை குத்புதீன் கான் பொறுப்பில் வைத்து அரசையும் என்னிடம் ஒப்புவித்தார். மருது சேர்வைக்காரர்களையும் என்னிடத்தில் நேர்மையாகவும்


31 Ward B. S. Memoir of Madura and Dindigul vol. 3, p.9.

32 Military Country Correspondence vol. 35-p. 209-10.