பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

மரியாதையாகவும் நடந்து கொள்ளுமாறு கட்டளை இட்டனர். ஆனால் அவரிகள் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளனர். ... ...” என குறிப்பிட்டு இருந்தார்.33

கும்பெனித்தளபதி கர்னல் ஸ்டுவர்ட் தலைமையில் சிவகங்கை நோக்கி படை எடுப்பு துவங்கியது. வழியில் புதுக்கோட்டைத் தொண்டமானது மூவாயிரம் படைவீரர்களும் கும்பெனித் தளபதியின் உதவிக்கு ஓடோடி வந்தனர்.34 இராமநாதபுரம் கோட்டையில் இருந்து உதவிப்படை யொன்றும் தளபதி மார்ட்டின்ஸ் தலைமையில் புறப்பட்டுச் சென்று கொல்லங்குடி அருகே தளபதி ஸ்டுவர்ட்டுடன் 13-5-1789ல் சேர்ந்து கொண்டது. மருது சேர்வைக்காரர்களது அணியில் கருமருந்து வெடி அணி இருந்தும் கூட, அங்கு நடந்த போரில் கும்பெனிப் படையினது முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஆதலால் காளையார் கோவிலைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிக்கு அவர்கள் பின் வாங்கினார்.35 இதற்கிடையில் தளபதி ஸ்டுவர்ட்டுக்கு மதுரை, தஞ்சை, திருச்சியில் இருந்து அடுத்தடுத்து உதவி அணிகள் வந்து கொண்டிருந்தன. இவைகளுக்கெல்லாம் மேலாக மருதுசேர்வைக்காார்கள் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்த பிரஞ்சுத் தளபதி டூபிரே கும்பெனியார் பக்கம் சேர்ந்து கொண்டு மருது சேர்வைக்காரர்களது ராணுவ அணிகள் நிலைகள், ஆயுத இருப்பு. காளையார்கோவில் கோட்டைக்கான குறுக்குப் பாதைகள். பற்றிய துப்புகளைத் தெரிவித்துவிட்டான்.36 துரோகத்திற்கு எதிரே வீாாதி வீரர்களும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லையே 14-5-1789ம் தேதி காளையார் கோவில் கோட்டை எதிரில், நடந்த போரில் கும்பெனிப்படை சிவகங்கை கிளர்ச்சிக்காரர்களைத் தோற்கடித்தது37மருது சேர்வைக்காரர்கள் திருப்பத்துாருக்குப் பின்னடைந்தனர். அங்கிருந்து மைசூர்


33 Military Consultations vol. 129C. (9 5-1789) pp 1552-56

34 Military Consultations. vol. 129, (6–5–1789), p. 1345

35 Ibid (21 5-1789) p 1346

36 Rajayyan K. Dr. History of Madurai (1974), p. 307

37 Military Consultations. vol. 129, (7-6-1789), p. 1552-56