பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அரசுப் பகுதியான விருபாட்சியில் புகலிடம் பெற்றனர்.38 சிவகங்கைச் சீமை குழப்பம் நீங்கியதாகக் கருதி நான்கு மாதங்கள் தங்கி இருந்த கும்பெனிப்படை திருச்சிக்குத் திரும்பியது.39 ராணி வேலு நாச்சியாரது பாதுகாவலுக்கு மட்டும் ஒரு சிறிய அணி சிவகங்கையில் தங்கி இருந்தது.

ஆனால் மருது சகோதரர்களும் அவரது ஆதரவாளர்களும் அடுத்த ஐந்து மாதங்களில் சிவகங்கைக்குத் திரும்பி வந்தனர். திடிர்த் தாக்குதலினால் நவாப்பினது பாதுகாப்புப்படையை நிலை குலையச் செய்து, நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இதனை அறிந்த நவாப்பும் கும்பெனியாரும், ஆலோசனைகள் செய்து மருது சேர்வைக்காரர்களுடன் ஒரு உடன் பாட்டிற்கு வந்தனர். காரணம் மைசூர் மன்னர் திப்புசுல்தானது உதவி மருதுசேர்வைக்காரர்களுக்குக் கிடைத்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. ராணி வேலு நாச்சியாரது மகளை மணந்து இருந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவரை சிவகங்கை அரசராக ஏற்பது என்றும், அவரது பிரதானிகளாக மருதுசகோதரர்கள் பணியாற்றுவதென்றும், நவாப்பிற்கு சிவகங்கை அரசு ஆண்டுதோறும் மூன்று லட்சம் ரூயினை வருடப்பணமாக செலுத்த வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.60 இந்த உடன்பாடு மருது சகோதரர்களுக்காகவே ஏற்பட்டதுபோன்ற குறைபாடு ராணி வேலு நாச்சியாருக்கு ஏனெனில் சிவகங்கை இளவரசி வெள்ளச்சியின் கரங்களைப் பற்றுவதற்கு கருதியும் உரிமையும் பெற்று இருந்த பாடமாத்தூர் கெளரி வல்லய ஒய்யாத் தேவரைப் புறக்கணித்து, சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரை சிவகங்கை அரச குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தியவர்களே மருது சேர்வைக்காரர்கள்தான் என்றாலும், அன்றைய அரசியலில் வலுப்பெற்று இருந்த ஆற்காட்டு நவாப்பையும் அவரது கூட்டாளியான கும்பெனியாரையும் பகைத்து ஒதுக்கத்தக்க துணிச்சலும் பலமும் ராணிவேலு நாச்சியாருக்கு இல்லை. கும்பெனியாருக்கு நிலைமை


38 Ibid vol. 130, (16-6-1789), p. 1683

39 Ibid vol. 131, (10-11-1789), p. 2910

40 Military Consultations vol 155, (24-1-1792.) p. 474