பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


தெளிவாகப் புரிந்து இருந்த பொழுதிலும், மைசூர் மன்னர் திப்புவின் ஆதரவாளர்களான மருதுசகோதரர்கள் மூலம், தமிழ்நாட்டில் திப்புவின் படையெடுப்பு அபாயத்தைத் தோற்றுவிக்க அவர்கள் விரும்பவில்லை.[1] இவைகளுக்கு எல்லாம் மேலாக, நாளடைவில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் விசுவாசமுள்ள நண்பர்களாக மாறினர். அவர்களது செல்வாக்கு வளர்ந்தது. கும்பினி தளபதி கர்னல் வெல்ஷின் தோழமையும் கலைக்டர் சுல்லிவனின் தொடர்பும் சிவகங்கை சீமைக்கும் கும் பெனியாருக்குமிடையே நெருக்கத்தை மிகுதிப்படுத்தின.


  1. Rajayyan K. Dr : Histoty of Madurai (1974,) p. 308.