பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

மருது சகோதரர்கள்

மிழகத்தில் உள்ள சமூக கல்வி நிலைகளில் பிற்பட்ட வகுப்பினர்களில் “அகம்படிய” குலத்தினரும் ஆவர். இந்த சமூகத்தினர், தமிழகத்தில் பரவலாக இருப்பதாகவும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எனவும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைச் சீமை மக்கள் கணக்கெடுப்பு (1901) அறிக்கை[1]யில், வேளாளப் பெருமக்களை யொத்த வாழ்க்கை நிலையில் உள்ள இவர்கள், கோவை, செங்கை, சேலம், வடஆற்காடு மாவட்டங்களில், மற்றப் பகுதிகளைவிட குறைவாக இருப்பாகவும், மதுரை மாவட்டத்தில் (இன்றைய இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களின் மறவர் சமூக ஜமீந்தார்களின் பணியாளர்களாக இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வாழ்க்கைநிலை சமுதாய உறவுகள், மரபுகளைப் பின்பற்றுதல் ஆகியவைகளில் கள்ளர், மறவர் ஆகிய குலத்தவரை ஒத்து இருக்கின்றனர் என்றும் வசதிபடைத்த இந்த சமூகத்தினர் பிறப்பு, பூப்பு, மணவினை, இறப்பு ஆகிய சடங்குகளில் வெள்ளாளரையும் வசதிக்குறைவானவர்கள். மறவர்களையும், முன்னவர்களால் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் கணக்கு அறிக்கைகளில் இந்த மங்கள். கள்ளரி, மறவர் குலத்தின் மற்றொரு பிரிவினராகவே குறிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் இவர்கள், தாங்கள் செம்பி நாட்டு மறவர் வழியினர் என்று கூறிக் கொள்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இவர்கள் “தெற்கத்தியார்” என வழங்கப் படுகின்றனர். காரணம் தெற்கே மதுரை,


  1. Edgar Thurston : Castes and Tribes of South India, (1909) pp 1-10.