பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


தமிழகத்தில் உள்ள அகம்படியர் சமூகத்தில், வெள்ளையன் சேர்வைக்காரர் போன்ற சிறந்த ராஜதந்திரியும் தளகர்த்தரும் இதுவரை தோன்றவே இல்லை. கி. பி. 1746.62 வரை சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்தவர். திருநெல்வேலிப் பாளையக் காரர்கள் அனைவரும், மறவர்களும் நாயக்கர்களும் பயந்து நடுங்கும் வகையில், வெள்ளையன் சேர்வைக்காரர் போர்த்திறன்பெற்று இருந்தார். கி. பி. 1752ல் மைசூர் அரசரது எடுபிடியாக மதுரைக் கோட்டையைப் பிடிக்க வந்த வெள்ளைத்தளபதி கோப்புடன் வாள் போரிட்டு அவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதுடன், மதுரை அரியணைக்கு உரிய வாரிசும், மறைந்த மதுரை நாயக்க மன்னர் மரபினருமான விஜயகுமார பங்காரு திருமலை நாயக்கருக்கு சேதுபதி மன்னர் விருப்பப்படி மதுரை மன்னராக முடி சூட்டி வைத்து மகிழ்ந்தவர். அவரது மாமனார் வயிரவன் சேர்வைக்காரர் மறவர்சீமையின் சிறந்த தளபதியாக விளங்கிய துடன், வாதாபி போருக்குப் பின்னர், தம்மை ஆன்மீக வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட பல்லவ மன்னரது படைத்தளபதி பரஞ் சோதியாாைப் போன்ற அறவாழ்வை மேற்கொண்டவர். கோவில் திருப்பணி பல செய்தவர்.*

இந்த இருபெரும் தலைவர்களைப் போன்று தமது மக்களும் சிறந்த குடிமக்களாக வளர்ந்து வாழ வேண்டும் என மொக்கை பழனி சேர்வைக்காரர் விரும்பியது இயல்பானதுதான். மருது சாகாதர்களும், துரோணருக்கு வாய்ந்த அச்சுனன், ஏகலைவன் போன்று வாள்வீசிப் போரிடுவதிலும், வளரித்தண்டை எறிந்து விரும்பிய இலக்கைக் காக்குவதிலும், அவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகில் இல்லை என்னும் அளவில் சிறந்த வீரர்களாக வளர்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் 5 இவர்களுடன் நெருக்கமாகப்பழகி மகிழும் வாய்ப்பைப் பெற்ற வெள்ளைத்தளபதி வெல்ஷு, அவர்களது வீரவாழ்வை தமது நாட்குறிப்புகளில் இவ்விதம் சித்தரித்து வரைந்துள்ளார். "...... . மருதுசேர்வைக்-


5 Rajaram Row T. : Manual of Ramnad Samasthanam (1898) p. 248.

இராமநாதபுரம் ---- தேவிப்பட்டினம் சாலைக்கு அண்மையில் உள்ள பெரு வயல் கிராமத்தில் முருகவேளுக்கு பெரிய கோயில் ஒன்றை கிர்மானித்தார், இன்றும் அந்தக் கோயில் ரணபலி முருகன் ஆலயம் என சிறப்பாக விளங்கி வருகிறது. சேதுபதி மன்னர்களது அறக்கொடையால் ஆலயம் நன்கு பராமரிக்கப்படுகிறது.