பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஈட்டி எறிவதற்கும், வாள்போர் செய்யவும், குறிப்பிட்ட தொலைவில் வளரித்தண்டு வீசித் தாக்குவதையும் எனக்கு கற்றுக் கொடுத் தவரே அவர்தான்" என கர்னல் வெல்ஷின் குறிப்புகள் கூறுகின்றன.6 இந்தப் பொதுப் பண்புகளைத் தவிர பெரிய மருது என்ற வெள்ளை மருதுவை விட, சின்னமருதுவிடம் சில சிறப்பான பண்புகளும் இருந்தன. எதிரியின் இயல்புகளை - குறிப்பாக பலவீனங்கனை விரைவாகப் புரிந்து கொள்ளுதல் - அவைகளைத் தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளுதல் ஆகியவைகளில் அவர் திறமை பெற்று இருந்தார். அத்துடன் தமக்கு நல்லது என்று நம்புவதை அதன் விளைவு கருதாது துணிந்து மேற் கொள்ளும் துணிச்சலும் அவருக்கு இருந்தது. அவரது நடவடிக் கைகளைக் கண்டு அவரது எதிரிகள் அச்சமும் பீதியும் அடைந் தனர். இந்த நாட்டு மக்களை மிகவும் இழிவாக எண்ணி இருந்த பரங்கியர்களுக்குக்கூட "சின்ன மருது" என்றால் சற்று நிதானமாக நடக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்படுவது உண்டு. இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பாளரான கர்னல் மார்ட் டின்ஸ் என்ற பரங்கி, சின்ன மருதுவின் வீர சாகசங்களில் மனத்தைப் பறிகொடுத்து அவரது நெருங்கிய நண்பராக இருந்தான். காால் வெல்ஷ் சின்னமருதுவிடம் வளரி, வாள். வேல், ஆகிய தமிழர்களது ஆயுதங்களை திறமையாகப் பயன்படுத்தும் நுணுக்கங்களை சின்னமருதுவிடம் கற்று அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டான். அவர் பாங்கிர் கொண்ட மதிப்பும் பற்றும், வீர விளையாட்டுகளுக்கு - முரட்டுத்தனத்திற்கு - சில நேரங்களில் மூடு திரையாகவும் உதவியதைச் சில நிகழ்ச்சிகள் காட்டுகினுறன.

நவாப்பின் பொறுப்பில் உள்ள மறவர் சீமையின் முக்கியமான ஆறு காட்டைகளில் இரண்டு சிவகங்கைச் சீமையில் பிருந்தன. ஒன்று திருப்பத்துார். மற்றொன்று திருப்பூவனம்.7 திருப்பூவனம் கோட்டையை மதுரையை ஆட்சிபுரிந்த கூன் பாண்டியன் அமைத்ததாக சில ஆவணங்களில் காணப்படுகின்றது8 பதினாறு கொத்தளங்களும் முப்பத்து மூன்று அடி உயரமும்


6 Col. James Welsh: Military Reminiscenees (1968) vol. I pp. 129-130

7 Military Country Correspondence, vol 44 (14-8-1793)p. 390

8 Ibid. vol 44B (24-7-1793) p.p. 450-52