பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

இருபத்து நான்கு அடி அகலமும் கொண்ட நான்கு மேடைகளுடன் அந்தக்கோட்டை காணப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது.9 மதுரையின் எல்லைக் காவல் அரணாக அமைந்துள்ள இந்த கோட்டையின் மீது சின்னமருது சேர்வைக்காரரது கவனம் திரும்பியது. மெதுவாக அதனை அழிக்கத் திட்டமிட்டார். அவரது ஆட்கள் அந்தக்கோட்டையை இரவுபகலாக மெதுவாக அழித்துவந்தனர்.10 அந்தக்கோட்டைப் பொறுப்பில் இருந்த நவாப்பின் பணியாளர் (கிலேதார்) மீர் அகமது என்பவரைத் தாக்கி அவமானப்படுத்தினர். அவரது பணியில் இருந்து துரத்தினர். இந்த நிகழ்ச்சியைக் கேள்விபட்ட நவாப் தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கவர்னரைக் கோரினார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பில் இருந்த கோட்டைப் பொறுப்பாளரும் சின்னமருதுவின் நண்பருமான கர்னல் மார்டின்ஸ் அனுப்பிய பொய்யான அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூவனத்தில் அத்தகைய நிகழ்ச்சி நடக்கவில்லையென்றும், அச்சமயம் சின்னமருது சேர்வைக்காரர் சுகவீனமாக இருப்பதாகவும் மார்டின்ஸ் அறிக்கையில் கண்டிருந்தது.11 இதனை மறுத்து நவாப் மீண்டும் திருப்பூவன நிகழ்ச்சி பற்றிய ஆதாரங்களை அளித்தவுடன், சிக்கந்தர் மலையில் நிலை கொண்டு இருந்த கர்னல் பிரவுன் திருப்பூவனம்சென்று கோட்டை யின் பொறுப்பை மேற்கொண்டான். 12இருபத்து இரண்டு ஆண்டுகள் அந்தக் கோட்டைப் பொறுப்பாளராக இருந்த மீர் அகமது மூளலாகான் மதுரைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்னொரு நிகழ்ச்சி: சிவகங்கைச் சீமை கழனிவாசல் கிராமத்திற்கு வந்த தொண்டமான் சீமையைச் சேர்ந்த இருவர், மருது சேர்வைக்காரர் பணியாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கோரச் செயலுக்கு சரியான காரணம் எது எனத் தெரிய வில்லை. இதனை வன்மையாகக் கண்டித்து, அனுப்பிய தொண்ட மானது குற்றச்சாட்டுக்களின் மீது சிவகங்கைச் சேர்வைக்காரர்-


9 Ibid (1-7-1793), p. 350

10 Ibid (24-7-1793) p. 454-55.

11 Military Country Correspondence. vol 44; (8-8-1793.) 381.

12 Revenue Consultations, vol. 91-(A) 7-1-1798 pp. 4857-58