பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

களுக்கு கும்பெனியார் அறிவுரையைக் கூட வழங்காமல் மழுப்பி விட்டனர்.13

மற்றொரு நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த திருவாடானை சுங்கச்சாவடி வழியாகக் கடத்தப்பட்ட சிவகங்கைச் சீமைப் பொருட்களுக்குரிய சுங்கத்தீர்வைத் தொகையான ரூ. 15,000/-யை, இராமநாதபுரம் அரசுக்கு செலுத்தாமல் சிவகங்கைப் பிரதானி அலைக்கழிவு செய்து காலங்கடத்தி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி, கும்பெனிக் கலெக்டரது கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்று பரிகாரம் கோரிய பொழுது, தமது இயலாத் தன்மையைத் தெரிவித்ததுடன் மேலிடத்திற்கு முறையீடு செய்யுமாறு மன்னருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அந்த முறையீட்டின் மீது கும்பெனியார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.14 பொறுமை இழந்த சேதுபதி மன்னர், தமது நாட்டின் வழியே சிவகங்கைச் சிமைக்குச் செல்லும் வாணிபப் போக்குவரத்து வழியை மாற்றி முழுவதுமாக தமது சீமை வழியே வாணிபச் சாத்துக்கள் செல்லுமாறு நிர்ப்பந்தித்த பொழுது, வாணிபச் சாத்து வருமானத்தை இழந்த சிவகங்கைப் பிரதானிகள் இராமநாதபுரம் சீமைக்கு வருகிற ஆற்றுக்கால்களை அடைத்து,ஆற்றைநீர் கிடைக்காமல் செய்ய முயன்றனர்.15 இன்னும் இதனைப் போன்று பல எல்லை சிக்கல்கள் எழுந்தமைக்கும் இராமநாதபுரம் சேதுபதி ளன்னர்தான் காரணம் என சின்னமருதுவுடன் சேர்தது.கும்பெனியாரும் ஓலமிட்டனர்.16

இங்ஙனம் சின்னமருது சோவைக்காரரது அத்துமீறல்களுக்கு அணையிடாது மறைமுகமாக அவருக்கு ஆதரவு வழங்கி வந்ததற்குக் காரணம் அன்றைய சூழ்நிலையில் சின்னமருதுவின் மூலமாக மைசூர் மன்னர் திப்புசுல்தானது பகைமையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற கும்பெனியரது பயம். அத்துடன்,


13 Madurai District Records : vol 1202. 5.2 1792,

சிக்கந்தர் மலை - மதுரைக்கு தென்மேற்கே 10 கி.மீ தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் மலை, இந்த மலை மீது அடக்கம் பெற்றுள்ள முஸ்லிம் பெரியாரது நினைவாக அந்தமலை இவ்விதம் அழைக்கப் படுகிறது

14 Military Country Correspondence vol. 45, p. 103

15 Ibid (30-6-1794), p.230 16 Military Consultations vol. 184, (25-3-1794) pp. 1236-70