பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23


4.2.1801, 30.3.1801 ஆகிய நாட்களில் எழுதிய அவர்களது மடல்களிலும், இந்த “விசுவாசம்” தெளிவாகக் காணப்படுகிறது.23 இன்னொரு கடிதத்தில் அவர்கள் தங்களைக் கும்பெனியாரது குழந்தைகள் என்று கூட குறிப்பிட்டு இருக்கின்றனர்.24

இங்ஙனம் கும்பெனியாரது நேசத்தையும் விசுவாசத்தையும் பத்தாண்டுகளுக்கு மேலாக மதித்து வந்த சிவகங்கை சேர்வைக்காரர்களது மனநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காரணம் அடுத்து அடுத்து ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள்.


23 Military Country Correspondence : vol. 45 (8-7-1794) pp. 234-42

24 Madurai District Records: vol. 1133-(30-3-1801), pp. 200-210