பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

அவர்கள் தவறிவிட்டனர். அதன் பிரதிபலிப்பு முதுகுளத்துார் பகுதி மக்களது புரட்சி மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டது. வெற்றியினால் திளைத்து மகிழ்ந்த கலெக்டர் லூவிங்டன், மருது சகோதரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். சென்னைக் கோட்டையில் கும்பெனிக் கவர்னரது தலைமையில் கூடிய "கும்பெனியரது இயக்குநர்கள் குழு" மருது சேர்வைக்காரர்கள் தக்க சமயத்தில் உதவியதற்காகத் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் கலெக்டர் லூவிங்டன் பரிந்துரைத்தவாறு சேர்வைக்காரர் மக்களுக்கு 116.7.52 ஸ்டார் பக்கோடா பணமதிப்புள்ள அன்பளிப்புகளை வழங்க அனுமதித்தது. அத்துடன் போரில் உதவிய சிவகங்கைப் படையணியாளருக்கு உரிய "படி" வழங்கவும் முடிவு செய்தது.2 பின்னர் மருது சேர்வைக்காரர் மக்களும் சென்னை சென்று கும்பெனிக் கவர்னரைப் பேட்டி கண்டனர். ஆரவாரத்துடன் வரவேற்கப் பெற்றனர்.3 அன்பளிப்புகளை ஏற்று வந்தனர்.

இந்த விசுவாச நடவடிக்கைக்காகக் கும்பெனியாரது பாராட்டையும் பரிசினையும் பெற்றார், சின்ன மருது சேர்வைக்காரர். என்றாலும், அபிராமம், கீழக்குளம் ஆகிய ஊர்களில் கிளர்ச்சித் தலைவர்கள் - மயிலப்பன், சிங்கன்செட்டி, புட்டூர் ஆகிய சாதாரண மக்கள் தலைவர்களது சிறிய அணிகள், கும்பெனியாரது வலிமைமிக்க ஆயுதப்படைகளைக் கட்டுப்பாடாக எதிர்த்து, ஆயுதம் ஏந்திப் போரிட்ட பாங்கு, சின்னமருது சேர்வைக்காரர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை சேதுபதி மன்னரது சேர்வைக்காரனான மயிலப்பன் தான் மக்களைத்திரட்டி வீணான கிளர்ச்சியில் கும்பெனியாருக்கு எதிராக ஈடுபட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டதைப் பொய்யாக்கி மறவர் சீமையின் அனைத்து மக்களும் அவர்களது மண்ணுக்குரிய நாட்டுப் பற்றுடனும், அன்னிய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுடனும், போராடி மடிந்த நிகழ்ச்சிகளை அவரால் மறக்க முடியவில்லை. மேலும், மறவர் சீமை மக்களது கிளர்ச்சியில் உள்ள உயரிய நோக்கத்தை உணர்ந்த சாயல்குடி, குளத்தூர், நாகலா-


2 vol. 95-(7–6–1799) p. 1078.

3 vol 110 (24-7-1799) p.p. 1361-69

4 vol 95. (7-6-1799)-p p. 957 1054.