பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

புரம், சாத்துார் ஆகிய பக்கத்துப் பாளையக்காரர்கள் (அனைவரும் வடுகர்கள்) முழு மூச்சுடன் இராமநாதபுரம் சீமை மறவர்களுக்கு இந்தக்கிளர்ச்சியின் பொழுது ஓடோடி வந்து உதவி புரிந்த பொழுது, அதே வட்டாரத்தில் பிறந்து, வளர்ந்த அவர் மட்டும், அந்த மக்களையும் அவர்களது மனநிலையையும் புரிந்து கொள் எாமல், அவர்களது அழிவிற்குக் காரணமாக இருந்ததை அவரது மனச்சாட்சி உறுத்திக் கொண்டு இருந்தது. அந்த மறக்குல மக்களது வீர மரணப் போராட்டம், அவர்கள் கொட்டிய குருதி பாறையில் பட்ட பனியாகப் பயனற்றுப் போக அவர் காரணமாக இருந்ததைப் பற்றிய குழப்பம் அவரை ஆழ்த்தியது. அத்துடன் கும்பெனியாருக்கு, அவர் செலுத்திய பேஷ்குஷ் தொகையான 18,500/- போர்ட்டோ நோவா பக்கோடா பணத்தை ஏப்பமிட்ட கலெக்டர் ஜாக்ஸனது துபாஷ் ரங்கபிள்ளை மீது சுமத்திய குற்றச்சாட்டைப்பற்றி சிறிதும் அக்கரை கொள்ளாது, கலெக்டர் லூவிங்டன் நடந்து கொண்டது கும்பெனியார் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதறடித்தது. இந்தத் தொகை வேறு காரணங்களுக்காக துபாஷ் ரெங்கபிள்ளை பெற்று இருக்க வேண்டும் என்பது கலெக்டர் லூவிங்டன் கருத்து. இது பற்றி விசாரிப்பதற்காக கிரீம்ஸ் என்பவரை இராமநாதபுரம் சிறைக் காவலில் உள்ள ரங்கப்பிள்ளையிடம் கும்பெனியார் அனுப்பினர். ரங்கப்பிள்ளையும் அந்த தொகையை - 7000 போர்ட்டோ நோவோ பக்கோடா பணத்தை மருதுசேர்வைக்காரர் கலெக்டர் ஜாக்ஸ்னிடம் நேரில் கொடுத்தார், என்றும் 11,500 போ.நோ. பணத்தைத் தாமே பெற்றுச் சென்று ஜாக்ஸ்னிடம் ஒப்படைத்தாக ஒப்புக் கொண்டார். 5 என்றாலும் சின்ன மருது சேர்வைக்காரரது குற்றச் சாட்டை ஏற்று பரிகாரம் காண கும்பெனியார் மறுத்தனர்.

இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு நாயக்கர், தமது பரிவாரங்களுடன் சிவகங்கைச் சீமைக்கு வந்தார். சின்னமருது சேர்வைக் காரரை 5.6.1799ல் பழமானேரி கிராமத்தில் அவர் சந்தித்து உரையாடினார். சில மாதங்களுக்கு முன்னால் கலெக்டர் ஜாக்ஸன் தம்மைச்சந்திக்குமாறு ஓலை அனுப்பியதை மதித்து


5 Revenue Consultations-vol. 95, 3-7–1799 p. 1182.

6 Board of Revenue Consultations, : vol 229. (10-6-1799) pp. 4853–91.