பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மறைந்தன. ஆர்க்காட்டு நவாப்பின் அரச உடையின் பின்னே மறைந்து இருந்து கொண்டு, அவரது அடிவருடிகளாக, தமிழகத்திற்குள் நுழைந்த பரங்கிகளது ஆணவமும் அதிகார வெறியும் தொடர்ந்து வளர்ந்தால், தமிழகத்தின் மன்னர் பரம்பரையினருக்கும் அவர்களது பிரதிநிதிகளான பாளையக்காரர்களுக்கும் - என் குடிமக்களுக்கும் கூட, தீராத தொல்லைகள்தான் என்பதை சிவகங்கைப் பிரதானிகள் உணர்ந்தனர். ஆதலால் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கருக்கு வழங்கிய அறிவுரை - துணிந்து நில் - என்பதாகும். சின்னமருது சேர்வைக்காரரது உறுதியான ஆறுதல் வார்த்தைகள் அவருக்கு உத்வேகத்தை ஊட்டின. அதுவரை கும்பெனியாருக்கு பயந்து நடுங்கிய கட்டபொம்மு நாயக்கருக்கு துணிச்சல் ஏற்பட்டது. தமது எதிர்காலம் பற்றிய தெளிவான முடிவுடன், அவர் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார். அன்று முதல் சிவகங்கைச் சீமைக்கும் பாஞ்சைப் பதிக்கும் நெருக்கமான தொடர்புகள் இரகசியமாகத் தொடர்ந்தன.

கட்டபொம்மு நாயக்கரது பழமானேரிப் பயணத்தையும் சிவகங்கைச் சேர்வைக்காரரது சந்திப்பையும் உளவாளிகள் மூலம் அறிந்த கலெக்டர் லூவிங்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. மறவர் சீமைப்பகுதிக்கு கும்பெனிக் கலெக்டராகப் பணியேற்று ஆறு மாதங்கள் ஆகியும் மரியாதை நிமித்தம் கூட அவரைச் சந்திக்காத பாஞ்சைப்பாளையக்காரர் சிவகங்கைப் பிரதானிகளிடம் செல்வதற்கு காரணம் என்ன? கலெக்டாது சிந்தனை நீண்டது.முடிவிற்கும் வந்தார். அதுதான் பாஞ்சைப்பாளையக்காரர்கும் பெனியா பிடத்தில் கொண்டிருந்த விசுவாசத்தைக் கை கழுவி விட்ட கட்சி மாறிவிட்டார் என்பது, அத்துடன் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக கும்பெனியார் கட்டளைகளை ஏற்று பணிவுடனும் பாசத்துடனும் நடந்து வந்த சிவகங்கைப் பிரதா விகளும், கும்பெனியாருக்கு எதிரான போரணியைத் துவக்க ஆயத்தமாகிவிட்டார் என்பது ஆகும். அதற்கான காரணங்கள்... ... ...அப்பொழுது, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, மதுரை, சீமைகளில் உள்ள பாளையங்களில் உள்ள மக்கள் பரங்கியரது அதிகார வெறிக்கும் ஆணவப் போக்கிற்கும் ஆளாகி சொல்லொணாத் துயரங்களைத் தாங்கி வந்தனர். முந்தைய ஆண்டுகளில் நிலவிய வறட்சிக்கொடுமை மாறாத நிலையில், கும்பெனிக் கலெக்டர் மக்களைக் கசக்கிப் பிழிந்து தங்கள் வரித் தீர்வைகளை வசூலித்து வந்தார். ஏற்கனவே இராமநாதபுரம்