பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

சேதுபதி மன்னரும், மைசூர் திப்பு சுல்தானும், அவர்களது பகுதிகளில் அக்கிரமமாக வரி வசூலை மேற்கொண்டு, குடிகளைக் கொடுமைப்படுத்தியதாக கூக்குரலிட்டு வந்த கும்பெனியார், இப்பொழுது, நவாப்பிடமிருந்து பெற்ற அதிகார மாற்றம் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த வரி வசூலைவிட மிகுதியான அளவு வசூல் செய்தனர். மதுரை, கூடலூர் பாளையங்களில் தொண்ணுாற்று ஆறு விழுக்காட்டிற்குக் கூடுதலாகவும், கம்பம் பகுதியில் பதினேழு விழுக்காடும், பழனிப்பகுதியில் பதினேழரை விழுக்காடும், திண்டுக்கல் பகுதியில் இருபத்து ஐந்து விழுக்காடும், கோயம்பத்துார் பகுதியில் நூற்றிப்பதினெட்டு விழுக்காடும், திருநெல்வேலிப் பகுதியில் நூற்றுப்பதினேழு விழுக்காடும், கூடுதலாக வசூல் செய்தனர்.9 இராமநாதபுரம் பகுதியில் புதிய உத்திகளைப் புகுத்தி, வசூல் முறையிலும் மாற்றங்களைப் புகுத்தினர். மகசூலில் குடியானவர்களுக்குரிய பங்கைக் குறைத்து கூடுதலான தொகையை வசூலிக்க ஏதுவாக தானிய விலையை உயர்த்தினர். பஞ்சத்திலும், பசியிலும், துடிதுடித்துக் கொண்டிருந்த விவசாயிகள், பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் சீமைக்கு உயிர்பிழைக்க ஓடினர். மறவர் சீமையின் கிராமங்கள்களை இழந்து, மக்கள் நடமாட்டயில்லாது காணப்பட்டன.10 ஆங்காங்கு தனிப்பட்ட ஒருசிலரும், அவர்களுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில், தங்களைக் காத்துக்கொள்ள வளர்ந்து வரும் அல்லல்களைக் களைய, ஆயுதமேந்திப் போராட ஆயத்தமாகிக் கொண்டு வந்தனர்.11

பாளையக்காரர்களது நிலையும் அன்றைய சாதாரண குடி மக்களது நிலையைவிட, மாறுபட்டதாக இல்லை. மதுரை நாயக்க மன்னர்களது முன்னூறு வருடகால ஆட்சியில் குறுநில மன்னர்களாக, மக்களிடம் மரியாதையுடனும் மதிப்புடனும், வாழ்ந்த அவர்களை, சமுதாயத்தின் கீழ்நிலைக்குக் கும்பெனியார் தாழ்த்தி வருத்தினர். அவர்களது அளவுகடந்த செல்வாக்கை அகற்றினர். ஆண்டுக்கொரு முறை அவர்கள் மக்களிடமிருந்து பெற்று வந்த


9 Board of Revenue Consultations: vol 2 (1-10-1799). 2–13.

10 Madurai District Collectorate Records : voI, 1129 (1-8-1800,)p.192.

11 Board of Revenue Consultations, vol 3 (10-10-1801,) p.116