பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

"தேசகாவல்" காணிக்கையைக்கூட கும்பெனி துரைகள், வற்புறுத்திக் பெற்றுக் கொண்டனர்.12 கும்பெனியாரது பேராசையை, லஞ்ச லாவண்யத்தைத் திருப்திப்படுத்த முடியாத பாளையக்காரர்களது வரிவசூலிக்கும் உரிமையை,பொது ஏலத்தில் விட்டு, கூடுதல் தொகை பெறும் தந்திரத்தைக் கையாண்டனர். இந்த முறையிலும், லஞ்சமும், ஊழலும் ஒட்டிக் கொண்டு இருந்தன.13

மதுரைச்சீமையின் குழப்பம் தொடர்ந்தது. மறவர் சீமை நிலையை நன்கு புரிந்து இருந்த மதுரை கலெக்டர் மதுரைச் சீமைப்பாளையக்காரர்களையும் குடிமக்களையும் எச்சரித்து வந்தார்.14 கம்பம், கூடலூர் பகுதிகளுக்குக் குத்தகைதாரராக இராமநாதபுரம் முத்துஇருளப்ப பிள்ளையை நியமித்து, மக்களது குரோதத்தையும் வெறுப்பையும் குறைக்க முயன்றனர்.15 கும்பெனியாரது கைக்கூலியும் சிறந்த நிர்வாகியுமான பிள்ளைவாளின் மந்திர தந்திரங்களுக்கு அங்கு மகிமை இல்லாமல் போய்விட்டது, அங்கே ஏமாற்றமடைந்த கும்பெனியார் பிள்ளையை திருப்பி அழைத்துக் கொண்டனர்.16 என்றாலும் வெறுப்பும், எதிர்ப்பும் குறையவில்லை. குமாரப்பிள்ளை என்ற திண்டுக்கல் குத்தகைதாரரும் அவரது சகாக்களான தாஸ் செட்டி. பந்தனச் செட்டி ஆகியோரும்கும் பெனியாருக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டனர்.17 தேவதானப்பட்டி பாளையக்காரர் கும்பெனியாரது கட்டளைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கும்பெனியாருக்கு 30-1-1795 முதல் செலுத்த வேண்டிய கிஸ்திப் பாக்கியைச் செலுத்த மறுத்தார். கும்பெனியாரது பாளையமான கள்ளர்பட்டியையும் கொள்ளையிட்டு தமது ஆத்திரத்தை வெளிப்படையாகக் காட்டினார். அதுவரை அக்கினிக் கொழுந்தாக இருந்த மக்களுடைய கொந்தளிப்பு, ஜுவாலையுடன் கூடிய காட்டுத்தீயாக மாறிப் பரவியது.


12 Board of Revenue Proceedings, vol 239,018-11-1799.)

13 Revenue Consultations, vol. 110, (4-9-1801.) 1662-63.

14 Madurai District Records vol 1110, 8-1-1795

15 Ibid 8-1-1795

16 Ibid. 1203 26-1-1795.

17 Madurai District Records vol : No 11.10(27-2-1795)