பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

அந்த வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த கன்னிவாடி பாளையக்காரரைக் கும்னிெயார் அணுகி சந்தையூர் பாளையக்காரர் லோகையா நாயக்கருக்கு எந்தவகையிலும்,உதவியோ புகலிடமோ அளிக்காது இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.18 அத்துடன் எப்படியாவது லோகையா நாயக்கரையும் அவரது கிளர்ச்சிக்காரர்கள் அணியையும் பிடித்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.19 பின்னர் சிலரைத் துரத்திப்பிடித்துத் துாக்கில் ஏற்றினர்.20 அந்தப் பட்டியலில் தேவதானப்பட்டி பாளையக்காரர் பூஜாரி நாயக்கரையும் சேர்த்தனர்.21

ஆனால், கும்பெனியாரது இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாறாக. அவர்கள் மீது, இன்னும் மிகுதியான வெறுப்பும் விரோதமும் வளர்ந்து வந்தன, என்பதை கி.பி. 1799ம் வருடத்திய கும்பெனியாரது ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. கன்னிவாடி பாளையக்காரர் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்துவந்தார். கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய கிஸ்தியை தொடர்ச்சியாக செலுத்தவில்லை. கும்பெனிக் கலைக்டரது உத்திரவுகளுக்கும் அவர் தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கும்பெனிக் கலெக்டர் திட்டமிட்டார். ஆயுதபாணிகளாக இருந்த அனைத்து சேவகர்களையும் ஒன்று திரட்டி வைப்பதிலும், கிளர்ச்சிக்காரர்கள் திடீர் தாக்குதல் தொடுத்தால் அதனைச் சமாளிப்பதற்குமான திட்டத்தைத் தயாரித்தார். இவ்விதம் மேலிடத்தில் இருந்து தக்க உதவிகளைப் பெறுவதற்குள்ளான இடைக்காலத்திற்கான ஏற்பாடு இது.22

வளர்ந்து வரும் பொதுமக்களது வெறுப்பிற்கு அன்றைய நாணயச் செலாவணி முறையில் இருந்த சிக்கல்களும் காரணமாக இருந்தன. மதுரைச் சீமையை பொறுத்தவரையில், மதுரை சுல்தான்கள், (கி.பி. 1334-78) மதுரை நாயக்க மன்னர்கள் (கி.பி. 1521-1736) ஆட்சிக்குப் பின்னர் முறையான பணம், காசுகள், வணி-


18 Madurai District Records vol 1111, (28-7-1795)

19 Madurai District Records vol. 1113. (27- 6–1795)

20 Revenue Consultations vol. 88 (11-10-1798)

21 M18 Madurai District Records vol 1111, (28-7-1795)

22.Madurai District Records vol 1121. (16 1-1799).