பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கத் துறையில் செலாவணியில் பயன்படுத்தப்படவில்லை. ஆர்க்காடு நவாப்பின் ஆட்சி அலங்கோலத்திலும் ஆர்க்காட்டு வெள்ளி ரூபாய் பணம் பொதுமக்களது புழக்கத்திற்குப் போதுமான அளவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை. அப்பொழுது செலாவணியில் இருந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனியாரது போர்ட்டோ நோவோ பக்கோடாக்கள்.23 ஆர்க்காடு நவாப்பின் நிர்வாகத்தில் செல்லும் பணமாக மதிக்கப்பட்டன. வேறு வழி இல்லாத காரணத்தினால் ஆனால் கும்பெனி அலுவலர்கள், தங்களது ஒப்பந்தாரர் (Renters) களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை போர்ட்டோ நோவோ பக்கோடா நாணயமாகக் கணக்கிட்டு வசூலிப்பது சிரமமாக இருந்தது. இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளில் டச்சு வியாபாரிகள், தானியங்கள், கைத்தறி துணி, வணிகத்தில் ஈடுபட்ட பகுதிகளில்தான் இந்த நாணயங்கள் கிடைத்தன. ஆதலால், ஒப்பந்தக்காரர்களிடம் அங்காடி விலைகளில், சேரவேண்டிய தொகையைக் கணக்கிட்டு வசூலிப்பது கும்பெனியாருக்கு சாதகமாக இருந்தது. இந்த இருதரப்பு நிலைகளையும் சீர் செய்து, பாக்கி கணக்குகளை நேர் செய்வது கடினமான காரியமாக இருந்தது.

இதனால் கும்பெனியாரே, பொதுமக்களது செலாவணிக்கு வேண்டிய நாணயங்களைத் தயாரித்து வெளியிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.24 ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஆர்க்காடு நவாப்பின் மானேஜர், செலாவணியில் இருந்த பிற நாட்டு நாணயங்களை அவர்களது ஆர்க்காட்டு வெள்ளிப் பணத்திற்கு ஈடாக அதாவது ஒரு பணத்திற்கு வெள்ளிப்பணம் தொன்னுற்று ஆறு என்று வாங்கி உருக்கி நவாப்பின் நாணயமாக மாற்றி வெளியிட்டார். இந்த நாணயப் புழக்கத்திற்கு மதிப்பு அதாவது நாற்பத்து ஆறு (இந்தப்)புது நாணயங்கள் ஆர்க்காட்டு வெள்ளி ரூபாய் ஒன்றிற்கு சமம் என மதிப்பிடப்பட்டது இதனால் பொதுமக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.25இன்னொரு


23 டச்சுக் கிழக்கிந்திய கும்பெனியார், தஞ்சாவூரில் ஆட்சி செய்த நாயக்க மன்னரிடமிருந்து பெற்ற கடற்கரைப் பகுதியில், கோட்டையும் பண்டகசாலையும் அமைத்து இருந்தனர். புதிய துறைமுகம் என்ற பொருளில் Porto Novo எனப் பெயரிட்டு அழைத்தனர். இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 'பொறை ஆறு' என்ற ஊர் தான் அந்தத் துறைமுகம்,

24 Madurai District Records vol. 1103, p. 17

25 Madurai District Records vol. 1103 p. 18.