பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

ளும் சம்பாதித்துக் கொடுத்தார் துபாஷ்.28 கும்பெனியாருக்கு வரவேண்டிய தீர்வை வரிவசூலில் ரங்கப்பிள்ளை மோசடிசெய்து, தனக்கும் தம்முடைய கலெக்டர் எஜமானருக்குமாக ஆதாயம் சேர்த்தார். தீர்வையாக வசூலிக்கப்பட்ட நெல் அம்பாரங்களுக்குக் குறைவான மதிப்பீடு செய்து, அதனை வாங்கிய தானிய வியாபாரிகளிடம் கையூட்டுப்பெற்று வந்தார். இத்தகைய வியாபார ஊழலினால் பாதிக்கப்பட்ட டச்சு நாட்டு வியாபாரி மெய்ஜியர் என்பவரது புகார்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.29 இத்தகைய பகல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட நெல்லைச்சீமைப்பாளயக்காரரில் சிலரும், சென்னையிலுள்ள கும்பெனியாரது கவர்னருக்கு முறையீடு ஒன்றில்" எங்களது காணிகள் அனைத்தையும் விற்றுக் காசாக்கினால் கூட கலைக்டரது (காலின்ஸ் ஜாக்ஸன்) தேவையில் நாலில் ஒரு பங்கினை நிறை வேற்ற இயலாதவர்களாக" இருப்பதாகக் குறிப்பிட்டு இருந் தனர்.30

துபாஷ் ரங்கபிள்ளையின் பேச்சிலே, பேரத்திலே சிக்கி தங்கள் பணத்தைப் பறி கொடுத்தவர்கள் பலர். சிவகங்கைப் பிரதானி சின்னமருது சேர்வைக்காரர், 18500 போ. நோ.பக்கோடா பணத்தை ரெங்கப்பிள்ளையிடம் "பேஷ்குஷ் இனத்தில் செலுத்தி இருப்பதாக கும்பெனியாருக்கு அறிக்கை செய்தும் பலன் இல்லை.31 கும்பெனியார் துபாஷ் ரங்கபிள்ளையினால் இழப்பிற்குள்ளான சிவகங்கை சேர்வைக்காரர்களுக்கு எவ்வித பரிகாரமும் செய்யவில்லை.32 ஆனால், கலெக்டர் ஆதரவுடன் துபாஷ் ரங்கபிள்ளை கையாடல் செய்து இருந்த கும்பெனியாரது வருமானமாகிய 22,285 போ. நோ. பக்கோடா பணத்தை உடனடியாக வசூலிப்பது என கும்பெனித் தலைமை முடிவு செய்தது.33 அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியது. துபாஷ்


28 Rajaram Row T : Manual of Ramnad Sarmasthanam(1891) р 255.

29 Revenue Consultation, vol. 21 (A) 15-12-1797, p. 4561.

30 Board of Revenue Proceedings. vol 185, p. 5961.

31 Military Consultations, vol 105(A) p.p 2513-14.

32 Revenue Consultations, vol 95.05-7-1799), p.p.1-104.

33 Ibid, 93, 4-1-1799, p. p. 104.