பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பிள்ளையின் கைகளில் விலங்கு பூட்டி இராமநாதபுரம் கோட்டை விதிகளில் கொண்டுசென்றதுடன் வசதி இல்லாத சிறு அறையொன்றிலே அடைத்து சிறை வைத்தனர்.34அவரது மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தி, கையாடல் தொகையை அவர்களிடமிருந்து பறிப்பதற்கு ஆவன அனைத்தையும் செய்தனர். ஒருவாறு அவர்களிடமிருந்து 14.852.போ. நோ. பக்கோடா பணத்தைப் பெற்ற பிறகு பரங்கியர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் சிவகங்கை சேர்வைக்காரர்கள், எட்டையாபுரம் பாளையக்காரர். சென்னை வணிகர் ஷாமல்ஜி, கீழக்கரை வணிகர் அப்துல் காதிரு மரைக்காயர் ஆகியோர்களிடம் கும்பெனியார் சார்பாக துபாஷ் ரங்கப் பிள்ளை மூட்டை போட்ட பணத்தைப் பற்றி கும்பெனியார் மூச்சுவிடவில்லை.

மதுரைச் சீமையின் வடக்குப்பகுதி, திண்டுக்கல் சீமை என வழங்கப்பட்டது. திண்டுக்கல் மலைமீது வலிமை மிக்க அரணை அமைத்து இராணுவச்சிறப்பு மிக்கதாகச் செய்தனர் மதுரை நாயக்க மன்னர்கள். அவர்களது ஆட்சிக்குப் பின்னர் கி பி. 1745 முதல் இந்தப் பகுதி முழுவதும் அரீரங்கப்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மைசூர் மன்னருக்கு கட்டுப்பட்டு இருந்தது.35 குறிப்பாக மைசூர் மன்னரான ஹைதர் அலியும் அவரை அடுத்து அரியணை ஏறிய திப்புசுல்தானும் திண்டுக்கல் சீமையின் நிர்வாகத்தில் மிகுந்த அக்கரை கொண்டு திண்டுக்கல் கோட்டையைச் சிறந்த ராணுவ தளமாக மாற்றினர். இதே கோட்டையில் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆயுதக்கிடங்கு ஒன்றை அமைத்தனர். (கி.பி. 1756) இந்தப்பகுதிக்கு ஆளுநராக ஹைதர் அலிகான் தமது மைத்துனர் சையது சாயபுவை நியமனம் செய்து இருந்தார். மத்துார், வடகரை, அம்மைநாயக்கனூர், இடையன் கோட்டை, கோம்பை, நிலக்கோட்டை, மாம்பாறை, பழனி, சந்தையூர், எரியோடு ஆகியவை. இந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கியமான பாளையங்களாகும்.36

மைசூர் மன்னர் திப்புசுல்தான் கி.பி. 1792ல் ஆங்கிலேய ருடன் ஏற்படுத்திக் கொண்ட மங்களுர் உடன்படிக்கையின்படி,


34 Ibid 95 (B) p. 1689.

35 Bowring L: Rulers of India - Hyder Ali and Tippu Sultan (1893) р. 73

36 Francis W: Gezetteer of Madurai (1914) pp. 70-71