பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

இந்தச்சீமை ஆங்கிலேயர்களது சொத்தாக மாறியது. இந்தப் பகுதியை அடுத்துள்ள கம்பம் பள்ளத்தாக்கில் ஏற்கனவே கி.பி. 1787 ல் ஆற்காட்டு நவாப்பினால் ஆங்கிலேயருக்கு வரிவசூல் உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் முதன்முறையாக ஆங்கிலக் கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களால் அந்தப்பகுதி நிர்வாகத்தை இயக்க முடியவில்லை. முதலில் ஜியார்ஜ் பிராக்டர் என்பவரும், பின்னர் இர்வின் என்ப வரும், கலெக்டர் பதவி ஏற்றுப் பயன் இல்லாததால், கர்னல் புல்லர்டர்ன் பொறுப்பில், இராணுவ அணியொன்று சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 37அந்த தளபதியின் அறிக்கை அப்பொழுது அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலையைச் சித்தரிப்பதாக உள்ளது.

"... ... ஒரு நூறாயிரம் பாளையக்காரர்களும், கள்ளர்களும், தெற்குப்பிராந்தியம் முழுவதும் ஆயுதம் தாங்கியவர்களாக உள்ளனர். அரசுக்கு எதிராகவும், தங்களை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அவர்கள் குழப்பத்தை எதிர்நோக்கிக் காத்து இருக்கின்றனர். இவர்களது கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்குள், நமது கருவூலப் பணம் முழுவதும் காலியாகி விடும். சீமையில் மக்களது நடமாட்டம் இல்லை. நமக்கு வர வேண்டிய வருமானத்தை எதிரிகள் வசூலித்து வருகின்றனர். நமது அணிகளில் கட்டுப்பாடு இல்லை. அவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களை இயக்கு கின்ற தலைமையும் சரியாக இல்லை. ... ... எங்கும் குழப்பம்... ..."38

இந்தப் பகுதிக்கு புதிய எஜமானர்களாக வந்த கும்பெனிக் கலெக்டர்களை இந்தப் பாளையக்காரர்கள் மதிக்கவில்லை. அவர்களைக் கும்பெனி நிர்வாகம் அங்கீகரித்து வழங்கிய சன்னதுகளைப் (சான்றிதழ்களை) பெற்றுக் கொள்வதற்கும் அவர்கள் மறுத்துவிட்டனர்.38 இந்தச் சூழ்நிலையில் அவர்களிடம் கிஸ்திப்பணத்தை


37 Rajayyan Dr. K: Administration and Society of Carnatico (1966) pp. 45-60.

38. Francis W: Gezetteer of Madurai (1914) pp. 181-82

39. Ibid, p. 68.