பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

களுடனும் சிவகங்கையில் இருந்து இன்று காலை நான்குமணிக்கு கட்டிக்குளம் வந்தனர். அங்கு துணிமணிகள், தானியங்கள். பணம் ஆகியவைகளைப் பறித்துக் கொண்டு போய்விட்டனர்.

-இராமநாதபுரம் பேஷ்காரரின் 18-2.1801ம் தேதி அறிக்கை.

“... ... ... சிவகங்கை ஆட்கள் காடல்குடிக்கு வந்தனர். அவர்களுடன் அய்யாத்தலைவனும், நாகராஜமணியக்காரர், இபுராகிம் சாயபு, மயிலப்பனும், குதிரைகளும் நூறு வீரர்களும் வந்துள்ளனர். நாகலாபுரம் தாலுகாவை கொள்ளையிடுவதற்காக”

- நாகலாபுரம் அமில்தாரது 7-3-1801 தேதிய அறிக்கை

”... ... ... ...சிவகங்கைச் சேர்வைக்காரரது பணியில் உள்ள பிராம்மணர் ஒருவர் ஆறு சிப்பந்திகளுடன் எட்டையாபுர பாளையத்தைச் சேர்ந்த மாவிலோடைக்கு வந்துள்ளார்.

"... ... ... ... மயிலப்பன் முந்நூறு வீரர்களுடன் மாவிலோடையில் இருந்து வருகிறார். காடல்குடி, குளத்துார் பாளையக்காரர்களுக்கு உதவுவதற்காக அவர் மருதுசேர்வைக்காரரது தூண்டுதல் பேரில் அங்கு அனுப்பப்பட்டு இருக்கவேண்டும். இது வரை சிவகங்கைச் சீமையில்தான் மயிலப்பன் பாதுகாக்கப்பட்டு வந்தார். இல்லையென்றால் மயிலப்பனுக்கு நூறு ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள் எப்படிக் கிடைத்தனர். சின்ன மருதுச்சேர்வைக்காரரது அலுவலரான சுப்பையரும் இன்னும் சிலரும் மண்டலமாணிக்கத்தில் தங்கி இருப்பதற்கு என்ன காரணம்? பாஞ்சைக்கும் சிவகங்கைக்கும் ஒலைகளை பரிமாறிக் கொள்வதற்குத் தானே!

-இராமநாதபுரம் பேஷ்காரது 7-3-1801 தேதிய கடிதம்

“. . . . 23-2-1801 தேதி மயிலப்பனும் அவரது குழுவினரும் போதிய ஆயுதம் தாங்கிய நூறுவீரர்களும், இருபது பொதி வெடிமருந்து, துப்பாக்கி தோட்டாக்களுடன் பெருநாளி மாகாணத்து திம்மநாதபுரத்திற்குச் சென்றனர்.

- கமுதி பாப்பாங்குளம் பேஷ்காரது 2-3-1801 தேதிய கடிதம்

சென்னையில் உள்ள பிரமுகர் ஒருவருக்கு மருதுசேர்வைக்காரர். இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.