பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்பளிப்புக்களையும் வழங்கி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார்.[1]

வழியில் தரக்குடியில் கம்பளத்தார் அணி தளபதி மயிலப்பனைப் பாராட்டி அவருக்கு பல அன்பளிப்புகளை வழங்கினர். காதிற்கு தோடு, கழுத்திற்கு கண்டசரம், கைகளுக்கு காப்புகள் என பொன் ஆபரணங்கள், பட்டாடை , குதிரைகள் ஆகியன. அத்துடன் அவரது கிளர்ச்சிக்காரர்கள் அணியில் முந்நூறு வீரர்களும் சேர்ந்து கொண்டனர். கழுமுடியில் அன்று தங்கி கமுதி, அபிராமம் பகுதிகளில் கிளர்ச்சியைத் தொடர்வது பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டார்.[2] இந்நிலையில் மேலமந்தை பாளையக்காரர் கிளர்ச்சிக்காரர்களுக்குப் பயந்து குடும்பத்துடன் ஊரை விட்டு சாயல்குடிக்கு ஓடினார். அங்குள்ள கும்பெனியாரது தானியக் களஞ்சியங்களை மேற்பார்த்து வந்த பணியாளர்களும் பயந்து முதலியார் மடத்துக்கு ஓடினர். பின்னர் மேலமாந்தை தானியக் கிடங்குகளைக் கொள்ளையிட்டு, கும்பெனியாரது மணியக்காரரையும் சம்பிரிதியையும் தொடர்ந்து சென்று சிறைப் பிடித்து காடல்குடிக்கு அனுப்பி வைத்தார்.[3]

இதற்கிடையில் காடல்குடியை தாக்கியபிறகு நாகலாபுரத்தில் நிலை கொண்டு இருந்த கும்பெனித் துருப்புக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியினால் கும்பெனிப் பணியாளர்களும் குடிமக்களும் பீதியடைந்தனர். நாகலாபுரம் எட்டையாபுரம், ஆகிய ஊர்களுக்கு பீரங்கி அணிஒன்றை அனுப்புவதற்கும், பாப்பாங்குளத்தில் போர் வீரர்களையும் ஆயுதங்களையும் ஆயத்த நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.[4] இத்துடன் புரட்சியில் ஈடுபட்டுள்ள பாளயக்காரர்களுக்கு மக்கள் எந்த வகையிலும் புகலிடமோ அல்லது உதவியோ செய்யக் கூடாது என்றும், மீறினால் விசாரித்து உடனடியாக


  1. Tinnevely District Records, vol. 3579 (1-3-1801)
  2. pp. 69-72. 4 Papers relating to Polgar war, Tinnevely District (1914).
  3. Ibid
  4. Madurai District Records, vol. 1182, (7-3-1801), pp. 5354,