பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

 என்பதையும் சுப்பையரது வாக்குமூலத்தில் இருந்து பெற்றனர்.[1] கும்பெனியார், எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவை எளிதாக அமைந்தன.

பாஞ்சையில் இருந்து திரும்பும் வழியில் தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரது அணியினர், கொடுமலூரிலும் அபிராமத்திலும் நிலை கொண்டிருந்த கும்பெனிப் படைகளை அழித்து நாசமாக்கினர்.[2] அவர்களது அடுத்த இலக்கு கமுதி கோட்டைதான். இந்தக்கோட்டை இராமநாதபுரம் சீமையில் உள்ள இராமநாதபுரம் கோட்டையைத் தவிர்த்து, கீழாநிலை, அனுமந்தக்குடி, ஆறுமுகம் கோட்டை, முஸ்டக்குறிச்சி, முதல்நாடு, பந்தல்குடி, பெருநாழி ஆகிய கோட்டைகள் அனைத்திலும் அமைப்பிலும், வலிமையிலும் சிறப்பானது மட்டுமின்றி இராமநாதபுரம் சீமைக்கு தெற்குவாயில் போல இராமநாதபுரம் - திருநெல்வேலி - வழியில் சிறப்பாக அமைந்து இருந்தது. பிரஞ்சு நாட்டுப் பொறியாளர் களது கட்டுமானத் திறத்தில் விஜயரகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது.[3] அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் குண்டாற்று வடகரையில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகளின் மேல் உறுதியான இரண்டு சுற்றுகல் மதிலுடனும் ஒன்பது அலங்கங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டு இருந்தது.[4] ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பெனிப்படையினருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் நிகழ்ந்த போர்களின் பொழுது பழுதடைந்த அந்தக் கோட்டையின் சிதைவுகள் அப்படியே காட்சி அளித்தன. அதனைக் கண்ட பொழுது மயிலப்பன் சேர்வைக்காரரது மனத்திரையில் பல காட்சிகள்-சிந்தனைக்கதிர்கள்-துளிர்த்து மின்னி மறைந்தன.

மறவர் சீமை மண்ணின் மீது கொண்ட கட்டற்ற பாசத் தினாலும் மறக்குடி மக்களது மூத்தகுடி மகனாக பல நூற்றாண்டுகளாக விளங்கிவரும் சேதுபதி மன்னர் மீது வைத்து இருந்த


  1. Ibid, vol. 1178 (A) pp., 315-16.
  2. Tinnevely District Records, vol 3579, (14-3-1801), p. 74.
  3. 13 Rajaram Row T: Manual of Ramnad Samasthanam (1891) p. 180.
  4. 14 Military Consultations vol. 21 (1772 AD) p. 160.