பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


ராஜவிசுவாசத்தினாலும் உந்தப்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் முன்னூறு பேருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக்கோட்டையில் இருந்த கும்பெனிப்படையினை ஆவேசமாகத் தாக்கி அழித்த நிகழ்ச்சியும், அதனையடுத்து அதே வருடம் நாட்டுப்பற்றும், அன்னிய எதிர்ப்பு ஆவேசமும் கொண்டு காட்டு வெள்ளம் போலத் திரண்ட சாதாரணக் குடிமக்களுடனும் சேர்ந்து மே, ஜான் மாதங்களில் இந்தக் கோட்டையில் இருந்த பரங்கிப்பட்டாளத்தைப் பல முறை எதிர்த்துப் போராடிய நிகழ்ச்சிகளும்[1] இந்தப் போராட்டங்களுக்கு தம்முடைய வலதுகரமாக இருந்து உதவி போர்க்களத்தில் தியாகியான சிங்கன் செட்டியின் நினைவும் எழுந்து அவரது கண்ணின் ஓரத்தில் நீர்த் துளிகளாக அரும்பி உதிர்ந்தன. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் பரங்கியரது பாசறையாக அந்தக் கோட்டை இருந்து வருவதை நினைக்கும் பொழுது, அவருக்கு வெறுப்பும், வெஞ்சினமும் எல்லையற்ற விசுவரூபமாக வளர்ந்தது. ஒரு குதிரை மீது அவர் அமர்ந்து இருந்த பொழுதும் ஓராயிரம் குதிரைகளை அவர் ஒருவரே இயக்குவது போன்ற நினைப்பு விண்ணைச் சாடுவது போன்ற பயங்கரமான போர்க்குரல்! அலறல்! அவரது அணியில் இருந்த ஓராயிரம் மறவர்களும் அவரைப்பின் தொடர்ந்து கோட்டை மதில்மேலும், கோட்டை முகப்பிலும் அணி வகுத்து நின்ற பரங்கிகளையும் அவர்களது கூலிப்படைகளையும் தாக்கினர். வேல், ஈட்டி, வாள், வளரி ஆகிய ஆயுதங்களுடன் ஒரு சில துப்பாக்கிகளும் அவர்களது முன்னேற்றத்திற்குப் பாதையமைத்துக் கொடுத்தன. கொலைகாரன் லெப்டினண்ட்மில்லர் கட்டளைப்படி வெடித்த துப்பாக்கிச் சூடுகளும் பீரங்கி வெடிப்புகளும் மறவர்களது உக்கிரமான - ஏன் - மூர்க்கத்தனமான தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. கமுதிக் கோட்டையின் பிரம்மாண்டமான பிரதான கதவுகள் நொறுங்கி மக்களது சக்திக்கு வழிவிட்டு வீழ்ந்தன.[2]

மறவர்களது மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது. இன்னும் சிலமணி நேரங்களில் இரண்டாவது சுற்று மதிலையும் கடந்து கோட்டைக்குள் புகுந்து விடலாம் என்ற நிலையில் போராடிய


  1. கமால் S.M. டாக்டர் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் 1987). 118-119
  2. Madurai District Records, vol. 1182, (8-3-1801) pp.84-86.