பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டிடத்தை தீக்கிரையாக்கி கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் வெஞ்சினத்தை ஆற்றிக் கொண்டனர். மற்றும் அங்குள்ள கம்பெனியாருக்கு சொந்தமான நெல் பட்டறைகளில் இருந்த நெல்லையும் சில கால்நடைகளையும் அங்கிருத்து கடத்திச் சென்றனர்.[1]

தொடர்ந்து அவர்கள் வடக்கே சென்று மறுநாள் விடியலில் வரவணி, செங்கப்படை கிராமங்களைத் தீயிட்டு அழிமானம் செய்து, மேற்கே திரும்பி பரத்தைவயலுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்குக் கம்பெனியாரது நெல் ஏராளமாக கொள்ளைப் பொருளாக கிடைத்தது.[2] அப்பொழுது மானாமதுரைக்கும் பரமக் குடிக்கும் இடையில் உள்ள நெட்டூர் கிராமத்தில் நிலை கொண்டு இருந்த பரங்கிப்படைகளை மருது சேர்வைக்காரர் மக்கள் படை தூரத்தியடித்த செய்திகிடைத்ததால் அவர்களது திட்டத்தை மாற்றி மீண்டும் வரவனி, செங்குடி கிராமங்களுக்குச் சென்று கொள்ளையிட்டனர். மேலும் கும்பெனியாருக்கு ஆதரவாக இருந்து உதவிய கொக்கூரணி கிராம மக்களைச் சூழ்ந்து பயமுறுத்தி அவர்களது உடமைகளைக் கொள்ளையிட்டனர், அதேபோல் அடுத்து, செட்டி கோட்டை கிராமத்தையும் அழித்துத் தீயிட்டனர். தகவல் தெரிந்து லெப்டி. மில்லர் பரமக்குடி வழியாக மயிலப்பன் அணியைத் தாக்குவதற்காக வந்தான். கொள்ளைப் பொருட்கள் அனைத்தையும் பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவைத்த மயிலப்பன் சேர்வைக்காரர். அவைகள் போய்ச் சேருவதற்காகமில்லதது அணியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மிகுதியாக சண்டையிட்டு தாமதப்படுத்திய பிறகு, தமது திட்டப்படி ஆனந்தூருக்கு புறப்பட்டுச் சென்றார்.[3]

மயிலப்பனது இத்தகைய வீர சாகஸங்களினால் இராமநாதபுரம் சீமையில் கும்பெனி நிர்வாகம் கலகலத்து தடுமாறியது. மக்கள் விரோதக் கொள்கையைக் கொண்டு அங்கு இயங்கி வந்த பரங்கியர் நிர்வாகம், மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கு அஞ்சி கோட்டை மதில்சூழ்ந்த பத்திரமான பகுதிக்குள் மட்டும் "ஆட்சி" நடத்தியது. ஏனைய பகுதிகள் அனைத்தும் கிளர்ச்சிக்காரர்கள்.

  1. 20 Madurai District Records. vol 1138, (20-3-1801)
  2. 21 Tinnevely District Records vol 3579 (20-3-1801) p. 81
  3. 22 Madurai District Records vol 1 133, (20-3-1801) p. 195