பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.[1] தங்களுக்கு அவ்விதம் பல வகைகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்துவதற்கு சிவகங்கைப் பிரதானிகள்தான் முழுக்க, முழுக்க மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர் என்பதை கும்பெனியார் ஒருமுகமாக முடிவு செய்தனர். மருது சேர்வைக்காரர்களது இந்த மறைமுக தாக்குதலை மடக்க இராமநாதபுரம் கலெக்டர் லூஷிங்டன் ஒரு வழியையும் கண்டு பிடித்தார்.

மறைந்த சிவகங்கை அரசி - ராணி வேலு நாச்சியாரது வம்சாவழி விவரங்களுடன் தம்மை அவசரமாகச் சந்திக்கும்படி சிவகங்கை பிரதானிக்கு கலெக்டாது ஒலை சென்றது. இந்த ஒலையின் பின்னணி எதுவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட சின்னமருது சேர்வைக்காரர் இயல்பான பணிவுடன் பதிலையும் கோரிய விவரங்களையும் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.[2] நேரில் சென்று அவரைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார். உடல் நலிவு காரணமாக தாம் சிவகங்கையை விட்டு வெளியேற இயலவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு இருந்தார். சின்னமருதுவை நேரில் அழைத்துப் பேசி எச்சரிக்கை செய்ய எண்ணிய லூஷிங்டனுக்கு மிக்க ஏமாற்றம் ஏற்பட்டது. சிவகங்கைச் சேர்வைக்காரருக்கு எழுதிய பதிலில்.“.... நான் தங்களை நேரில் மிக முக்கியமான காரணத்திற்காக சந்திக்க விரும்பினேன். உங்களைத் தவிர வேறு யாரும் அந்தப்பணியில் ஈடுபட இயலாது......” என தமது வருத்தத்தை கலெக்டர் குறிப்பாகத் தெரிவித்து இருந்தார். [3]

பொறுமை இழந்த கலெக்டர், மீண்டும் சின்னமருது சேர்வைக்காரருக்கு எழுதிய கடிதத்தில் இராமநாதபுரம் சீமை கிளர்ச்சிக்காரர்களுக்கு சிவகங்கை சீமை புகலிடமாக இருந்து வருவது பற்றிய புகார்கள் ஏராளமாக வரப்பெறுவதாகவும் சிவகங்கை சீமையில் நிலைகொண்டு இருக்கும் மயிலப்பனைப் பிடித்துக் கொடுக்குமாறும் கோரி இருந்தார். அந்தக்கடிதத்தின் வாசகம்[4]


  1. 23 Tinnevely District Records, vol 3579 (20-3-1801) p. 81
  2. 24 Military Consultations, vol. 297, (4-2-1801) p. 171-72
  3. 25. Madurai District Records, vol. 1133, (6-2-1801), p. 174.
  4. 26. Ibid, (25–3–1801) p. 176,