பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

களைப் பெற்ற பின்னர், அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வெடி மருந்துப் பொதிகளையும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது உறுதி. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இங்கு, காளையார்கோவில் காடுகளிலும் எல்லாவிதமான சாமான்களையும் சேகரித்து இருப்பு வைத்து வருவதுடன் பகிரங்கமான போருக்குரிய எல்லா ஆயத்தங் களையும் அவர் செய்து வருகிறார். ..." என்று தெளிவாக சிவகங்கை பிரதானிமீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவைபோன்ற கடிதங்களில் இருந்து சிவகங்கை சேர்வைக்காரர்கள், தங்களது சீமையில் உள்ள கும்பெனியாருக்கு ஆதரவான 'நாட்டுத் தலைவர்களை'ச் சந்தித்து அவர்களுக்கு மன மாற்றம் ஏற்படுத்துவதிலும், சிவகங்கைச் சீமையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நிய எதிர்ப்புப்போரை, காளையார் கோவில் கோட்டையில் நிகழ்த்தி, அந்த மண்ணின் மகத்தான பெருமையையும், மறவர்களது மானத்தையும் வீரத்தையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர், என்ற உண்மையை கும்பெனியார் கண்டு கொண்டதில் புதுமை எதுவும் இல்லை. சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளைக் கொண்ட பரந்த மறவர் சீமையின் புறக்காவல் நிலையமாக பாஞ்சாலங் குறிச்சியும் தலைவாயில் போன்று கமுதிக் கோட்டையும், தலைமை இடமாக காளையார்கோவில் கோட்டையும் அப்பொழுது திகழ்ந்து வந்தன. இந்த ராணுவ மையங்களின் நிலைமையைப் பொறுத்துத்தான் மறவர் சீமையின் எதிர்காலம் அமைந்துஇருப் பது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

மயிலப்பன் மீண்டும் இராமநாதபுரம் சீமைக்குத் திரும்பினார். அவரது பணி முழுவதும் அங்குதானே உள்ளது. வழியில் கமுதிப்பேட்டையில் உள்ள சில கடைகளை அவரது அணியினர் குறையிட்டனர். அபிராமத்தில் கும்பெனியாருக்கு ஆதரவாக இருந்த காதர் மீரான் என்ற முஸ்லீம் பிரமுகரைத் தேடிப்பிடித்தனர். கொன்று போடுவதற்கு. ஆனால் மயிலப்பன் தலையிட்டு அவருக்கு மனந்திருந்துவதற்கு வாய்ப்பாக மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். விபரம் அறிந்த சின்னமருது சேர்வைக்காரர். இத்தகைய இரக்கமான செயலுக்கு மயிலப்பனை கடிந்து